Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௭

Qur'an Surah Az-Zukhruf Verse 17

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ (الزخرف : ٤٣)

wa-idhā bushira
وَإِذَا بُشِّرَ
And when is given good news
நற்செய்தி கூறப்பட்டால்
aḥaduhum
أَحَدُهُم
(to) one of them
ஒருவருக்கு அவர்களில்
bimā ḍaraba
بِمَا ضَرَبَ
of what he sets up
எதை/அவர் விவரித்தாரோ
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
for the Most Gracious
ரஹ்மானுக்கு
mathalan
مَثَلًا
(as) a likeness
தன்மையாக
ẓalla
ظَلَّ
becomes
மாறிவிடுகிறது
wajhuhu
وَجْهُهُۥ
his face
அவரது முகம்
mus'waddan
مُسْوَدًّا
dark
கருப்பாக
wahuwa kaẓīmun
وَهُوَ كَظِيمٌ
and he (is) filled with grief
அவர்/துக்கப்படுகிறார்

Transliteration:

Wa izaa bushshira ahaduhum bimaa daraba lir Rahmaani masalan zalla wajhuhoo muswaddanw wa hua kazeem (QS. az-Zukhruf:17)

English Sahih International:

And when one of them is given good tidings of that which he attributes to the Most Merciful in comparison [i.e., a daughter], his face becomes dark, and he suppresses grief. (QS. Az-Zukhruf, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகின்றது. (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் ஒருவருக்கு, அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ (-வானவர்கள் அல்லாஹ்வின் பெண் குழந்தைகள் என்று) அதை (-அவருக்கு பெண் பிள்ளை பிறந்திருப்பதை) நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும் அவர் துக்கப்படுகிறார்.