Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 9

Az-Zukhruf

(az-Zukhruf)

௮௧

قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖفَاَنَا۠ اَوَّلُ الْعٰبِدِيْنَ ٨١

qul
قُلْ
கூறுவீராக!
in kāna
إِن كَانَ
இருந்தால்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
waladun
وَلَدٌ
குழந்தை
fa-anā
فَأَنَا۠
நான்தான்
awwalu
أَوَّلُ
முதலாமவன்
l-ʿābidīna
ٱلْعَٰبِدِينَ
வணங்குபவர்களில்
"ரஹ்மானுக்கு சந்ததி இருக்கும்பட்சத்தில் (அதனை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௧)
Tafseer
௮௨

سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ ٨٢

sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
rabbi
رَبِّ
அதிபதி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
rabbi
رَبِّ
அதிபதி
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
ʿammā yaṣifūna
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும்
அர்ஷுடைய இறைவனாகிய அவனே வானங்கள் பூமியின் சொந்தக்காரன். அவன் (இவர்கள் கூறும் பொய்யான) இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௨)
Tafseer
௮௩

فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِيْ يُوْعَدُوْنَ ٨٣

fadharhum
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விடுங்கள்!
yakhūḍū
يَخُوضُوا۟
அவர்கள் மூழ்கட்டும்
wayalʿabū
وَيَلْعَبُوا۟
இன்னும் விளையாடட்டும்!
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yulāqū
يُلَٰقُوا۟
அவர்கள் சந்திப்பார்கள்
yawmahumu
يَوْمَهُمُ
அவர்களது நாளை
alladhī yūʿadūna
ٱلَّذِى يُوعَدُونَ
எது/அவர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்
ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாள் இவர்களைச் சந்திக்கும் வரையில், வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும்படி இவர்களை விட்டுவிடுங்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௩)
Tafseer
௮௪

وَهُوَ الَّذِيْ فِى السَّمَاۤءِ اِلٰهٌ وَّ فِى الْاَرْضِ اِلٰهٌ ۗوَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ ٨٤

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்திலும்
ilāhun
إِلَٰهٌ
வணங்கப்படுபவன்
wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِ
பூமியிலும்
ilāhun
إِلَٰهٌۚ
வணங்கப்படுபவன்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸா அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வனுமாக இருக்கின்றான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௪)
Tafseer
௮௫

وَتَبٰرَكَ الَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۚوَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِۚ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٨٥

watabāraka
وَتَبَارَكَ
மிக்க பாக்கியமுடையவன்
alladhī lahu
ٱلَّذِى لَهُۥ
எவன்/ அவனுக்கு உரியதோ
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின்
waʿindahu
وَعِندَهُۥ
அவனிடமே
ʿil'mu
عِلْمُ
அறிவு இருக்கிறது
l-sāʿati
ٱلسَّاعَةِ
மறுமையின்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ளவைகள் ஆகியவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கின்றது. அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு போகப்படுவீர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௫)
Tafseer
௮௬

وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُوْنَ ٨٦

walā yamliku
وَلَا يَمْلِكُ
உரிமை பெற மாட்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
yadʿūna
يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றார்கள்
min dūnihi
مِن دُونِهِ
அவனையன்றி
l-shafāʿata
ٱلشَّفَٰعَةَ
சிபாரிசு செய்வதற்கு
illā man
إِلَّا مَن
ஆனால்/எவர்கள்
shahida
شَهِدَ
சாட்சிகூறினார்(களோ)
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மைக்கு
wahum
وَهُمْ
அவர்கள்
yaʿlamūna
يَعْلَمُونَ
நன்கு அறிந்தவர்களாக
அல்லாஹ்வையன்றி எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதனைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௬)
Tafseer
௮௭

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَيَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰى يُؤْفَكُوْنَۙ ٨٧

wala-in
وَلَئِن
sa-altahum
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
man
مَّنْ
யார்
khalaqahum
خَلَقَهُمْ
அவர்களைப் படைத்தான்
layaqūlunna
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
fa-annā
فَأَنَّىٰ
எப்படி
yu'fakūna
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றார்கள்
(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் (ஈஸா அல்ல;) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௭)
Tafseer
௮௮

وَقِيْلِهٖ يٰرَبِّ اِنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ لَّا يُؤْمِنُوْنَۘ ٨٨

waqīlihi
وَقِيلِهِۦ
இன்னும் அவருடைய கூற்றின்
yārabbi
يَٰرَبِّ
என் இறைவா!
inna
إِنَّ
நிச்சயமாக
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
"என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்" என்று (நபியே! நீங்கள்) கூறுவதும் நமக்குத் தெரியும். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௮)
Tafseer
௮௯

فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌۗ فَسَوْفَ يَعْلَمُوْنَ ࣖ ٨٩

fa-iṣ'faḥ
فَٱصْفَحْ
ஆகவே, புறக்கணிப்பீராக!
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
waqul
وَقُلْ
இன்னும் கூறிவிடுவீராக!
salāmun
سَلَٰمٌۚ
ஸலாம்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
அவர்கள் விரைவில் அறிவார்கள்
ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டு "ஸலாமுன்" (சாந்தி, சமாதானம்) என்று கூறி வாருங்கள். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௯)
Tafseer