Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 8

Az-Zukhruf

(az-Zukhruf)

௭௧

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚوَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ ۚوَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَۚ ٧١

yuṭāfu
يُطَافُ
சுற்றி வரப்படும்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களை
biṣiḥāfin
بِصِحَافٍ
தட்டுகளுடனும்
min dhahabin
مِّن ذَهَبٍ
தங்கத்தினாலான
wa-akwābin
وَأَكْوَابٍۖ
குவளைகளுடனும்
wafīhā
وَفِيهَا
இன்னும் அதில்
mā tashtahīhi
مَا تَشْتَهِيهِ
விரும்புகின்றவையும்
l-anfusu
ٱلْأَنفُسُ
மனங்கள்
wataladhu l-aʿyunu
وَتَلَذُّ ٱلْأَعْيُنُۖ
இன்னும் கண்கள் இன்புறுகின்றவையும்
wa-antum fīhā
وَأَنتُمْ فِيهَا
நீங்கள் அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பீர்கள்
(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) பொற்தட்டுக்களும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவைகளும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) "இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்" (என்றும் கூறப்படும்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௧)
Tafseer
௭௨

وَتِلْكَ الْجَنَّةُ الَّتِيْٓ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٧٢

watil'ka
وَتِلْكَ
இதுதான்
l-janatu
ٱلْجَنَّةُ
அந்த சொர்க்கம்
allatī
ٱلَّتِىٓ
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்
ūrith'tumūhā
أُورِثْتُمُوهَا
எது/நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள் அதை
bimā kuntum taʿmalūna
بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்
நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச் சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௨)
Tafseer
௭௩

لَكُمْ فِيْهَا فَاكِهَةٌ كَثِيْرَةٌ مِّنْهَا تَأْكُلُوْنَ ٧٣

lakum
لَكُمْ
உங்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
fākihatun
فَٰكِهَةٌ
பழங்கள்
kathīratun
كَثِيرَةٌ
அதிகமான
min'hā
مِّنْهَا
அவற்றில் இருந்து
takulūna
تَأْكُلُونَ
நீங்கள் உண்பீர்கள்
நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனி வர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன" (என்றும் கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௩)
Tafseer
௭௪

اِنَّ الْمُجْرِمِيْنَ فِيْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَۖ ٧٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
fī ʿadhābi
فِى عَذَابِ
வேதனையில்
jahannama
جَهَنَّمَ
நரகத்தின்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்
(ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௪)
Tafseer
௭௫

لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيْهِ مُبْلِسُوْنَ ۚ ٧٥

lā yufattaru
لَا يُفَتَّرُ
(வேதனை) இலேசாக்கப்படாது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
wahum
وَهُمْ
அவர்கள்
fīhi
فِيهِ
அதில்
mub'lisūna
مُبْلِسُونَ
நம்பிக்கை இழந்திருப்பார்கள்
அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௫)
Tafseer
௭௬

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِيْنَ ٧٦

wamā ẓalamnāhum
وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை
walākin
وَلَٰكِن
எனினும்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
humu
هُمُ
அவர்கள்தான்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
நாம் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௬)
Tafseer
௭௭

وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَۗ قَالَ اِنَّكُمْ مَّاكِثُوْنَ ٧٧

wanādaw
وَنَادَوْا۟
அவர்கள் அழைப்பார்கள்
yāmāliku
يَٰمَٰلِكُ
மாலிக்கே!
liyaqḍi
لِيَقْضِ
அழித்துவிடட்டும்!
ʿalaynā
عَلَيْنَا
எங்களை
rabbuka
رَبُّكَۖ
உமது இறைவன்
qāla
قَالَ
அவர் கூறுவார்
innakum
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
mākithūna
مَّٰكِثُونَ
தங்குவீர்கள்
(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) "மாலிக்கே! உங்களது இறைவன் எங்களுடைய காரியத்தை முடித்து விடவும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)" என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் "(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்" என்று கூறுவார். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௭)
Tafseer
௭௮

لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ٧٨

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
ji'nākum
جِئْنَٰكُم
உங்களிடம் வந்தோம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
aktharakum
أَكْثَرَكُمْ
அதிகமானவர்கள் உங்களில்
lil'ḥaqqi
لِلْحَقِّ
அந்த சத்தியத்தை
kārihūna
كَٰرِهُونَ
வெறுக்கின்றீர்கள்
(மக்கத்துக் காஃபிர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டு வந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௮)
Tafseer
௭௯

اَمْ اَبْرَمُوْٓا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَۚ ٧٩

am abramū
أَمْ أَبْرَمُوٓا۟
அவர்கள் முடிவு செய்து விட்டார்களா?
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
fa-innā mub'rimūna
فَإِنَّا مُبْرِمُونَ
நிச்சயமாக நாங்கள்தான் முடிவு செய்வோம்
(நபியே! உங்களுக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கின்றோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭௯)
Tafseer
௮௦

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ۗ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ ٨٠

am yaḥsabūna
أَمْ يَحْسَبُونَ
அவர்கள் எண்ணுகின்றனரா?
annā lā nasmaʿu
أَنَّا لَا نَسْمَعُ
நாம் செவியுற மாட்டோம்
sirrahum
سِرَّهُمْ
இரகசிய பேச்சை(யும்) அவர்களின்
wanajwāhum
وَنَجْوَىٰهُمۚ
அவர்கள் கூடிப் பேசுவதையும்
balā
بَلَىٰ
மாறாக
warusulunā
وَرُسُلُنَا
நமது தூதர்கள்
ladayhim
لَدَيْهِمْ
அவர்களிடம் இருந்து
yaktubūna
يَكْتُبُونَ
பதிவு செய்கின்றனர்
அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசிக் கொள்வதும் நமக்கு எட்டாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அன்று! அவர்களிடத்தில் இருக்கும் நம்முடைய மலக்குகள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮௦)
Tafseer