Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 6

Az-Zukhruf

(az-Zukhruf)

௫௧

وَنَادٰى فِرْعَوْنُ فِيْ قَوْمِهٖ قَالَ يٰقَوْمِ اَلَيْسَ لِيْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِيْ مِنْ تَحْتِيْۚ اَفَلَا تُبْصِرُوْنَۗ ٥١

wanādā
وَنَادَىٰ
அழைத்தான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
fī qawmihi
فِى قَوْمِهِۦ
தனது மக்களை
qāla
قَالَ
கூறினான்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
alaysa
أَلَيْسَ
இல்லையா?
لِى
எனக்கு சொந்தமானது
mul'ku
مُلْكُ
ஆட்சி
miṣ'ra
مِصْرَ
எகிப்துடைய
wahādhihi
وَهَٰذِهِ
இந்த
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
tajrī
تَجْرِى
ஓடுகின்றன
min taḥtī
مِن تَحْتِىٓۖ
எனக்கு முன்னால்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் உற்று நோக்கவில்லையா?
பின்னர், ஃபிர்அவ்ன் தன்னுடைய மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! இந்த "மிஸ்ர்" தேசத்தின் ஆட்சி என்னுடையதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்க வில்லையா?" என்று பறை சாற்றினான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௧)
Tafseer
௫௨

اَمْ اَنَا۠ خَيْرٌ مِّنْ هٰذَا الَّذِيْ هُوَ مَهِيْنٌ ەۙ وَّلَا يَكَادُ يُبِيْنُ ٥٢

am
أَمْ
?
anā
أَنَا۠
நான்
khayrun
خَيْرٌ
சிறந்தவன்
min hādhā
مِّنْ هَٰذَا
இவரை விட
alladhī huwa mahīnun
ٱلَّذِى هُوَ مَهِينٌ
எவர்/அவர்/பலவீனமானவர்
walā yakādu yubīnu
وَلَا يَكَادُ يُبِينُ
இன்னும் தெளிவாகப் பேசமாட்டார்
"தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடிய வில்லையே!" (என்றும்,) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௨)
Tafseer
௫௩

فَلَوْلَٓا اُلْقِيَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَاۤءَ مَعَهُ الْمَلٰۤىِٕكَةُ مُقْتَرِنِيْنَ ٥٣

falawlā ul'qiya
فَلَوْلَآ أُلْقِىَ
போடப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
aswiratun
أَسْوِرَةٌ
காப்புகள்
min dhahabin
مِّن ذَهَبٍ
தங்கத்தின்
aw
أَوْ
அல்லது
jāa
جَآءَ
வர வேண்டாமா!
maʿahu
مَعَهُ
அவருடன்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
muq'tarinīna
مُقْتَرِنِينَ
சேர்ந்தவர்களாக
"(அவர் நம்மைவிட மேலாக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் மலக்குகள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வர வேண்டாமா?" (என்றும் கூறி,) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௩)
Tafseer
௫௪

فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ۗاِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ ٥٤

fa-is'takhaffa
فَٱسْتَخَفَّ
அற்பமாகக் கருதினான்
qawmahu
قَوْمَهُۥ
தனது மக்களை
fa-aṭāʿūhu
فَأَطَاعُوهُۚ
ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
qawman
قَوْمًا
மக்களாக
fāsiqīna
فَٰسِقِينَ
பாவிகளான
அவன் தன்னுடைய மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு வழிப்பட்டு விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௪)
Tafseer
௫௫

فَلَمَّآ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَۙ ٥٥

falammā āsafūnā
فَلَمَّآ ءَاسَفُونَا
அவர்கள் நமக்கு கோபமூட்டவே
intaqamnā
ٱنتَقَمْنَا
நாம் பழிவாங்கினோம்
min'hum
مِنْهُمْ
அவர்களிடம்
fa-aghraqnāhum
فَأَغْرَقْنَٰهُمْ
மூழ்கடித்தோம்/அவர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
(இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௫)
Tafseer
௫௬

فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِيْنَ ࣖ ٥٦

fajaʿalnāhum
فَجَعَلْنَٰهُمْ
நாம் ஆக்கினோம்
salafan
سَلَفًا
முன்னோடிகளாக(வும்)
wamathalan
وَمَثَلًا
படிப்பினையாகவும்
lil'ākhirīna
لِّلْءَاخِرِينَ
மற்றவர்களுக்கு
இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௬)
Tafseer
௫௭

وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّوْنَ ٥٧

walammā ḍuriba
وَلَمَّا ضُرِبَ
விவரிக்கப்பட்டபோது
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமின்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணமாக
idhā qawmuka
إِذَا قَوْمُكَ
அப்போது உமது மக்கள்
min'hu
مِنْهُ
அதனால்
yaṣiddūna
يَصِدُّونَ
கூச்சல்போடுகின்றனர்
(நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உங்களுடைய மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௭)
Tafseer
௫௮

وَقَالُوْٓا ءَاٰلِهَتُنَا خَيْرٌ اَمْ هُوَ ۗمَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ۗبَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ ٥٨

waqālū
وَقَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
aālihatunā
ءَأَٰلِهَتُنَا
?/எங்கள் கடவுள்கள்
khayrun
خَيْرٌ
சிறந்த(வர்களா)
am
أَمْ
அல்லது
huwa
هُوَۚ
அவர்
mā ḍarabūhu
مَا ضَرَبُوهُ
அவரை உதாரணமாக அவர்கள் பேசவில்லை
laka
لَكَ
உமக்கு
illā
إِلَّا
தவிர
jadalan
جَدَلًۢاۚ
தர்க்கம் செய்வதற்காகவே
bal hum
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
khaṣimūna
خَصِمُونَ
தர்க்கம் செய்கின்ற(வர்கள்)
"எங்களுடைய தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற் கன்றி உங்களுக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தாம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௮)
Tafseer
௫௯

اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ ٥٩

in huwa
إِنْ هُوَ
அவர் இல்லை
illā
إِلَّا
தவிர
ʿabdun
عَبْدٌ
ஓர் அடியாராகவே
anʿamnā
أَنْعَمْنَا
அருள் புரிந்தோம்
ʿalayhi
عَلَيْهِ
அவர்மீது
wajaʿalnāhu
وَجَعَلْنَٰهُ
அவரை ஆக்கினோம்
mathalan
مَثَلًا
ஓர் அத்தாட்சியாக
libanī is'rāīla
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
ஈஸாவோ, நம்முடைய அடிமையே தவிர, (அவர் கடவுளல்ல; நம்முடைய பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவு மில்லை; இதனை மறுத்தே கூறியிருக்கின்றார்.) ஆயினும், அவர்மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௯)
Tafseer
௬௦

وَلَوْ نَشَاۤءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰۤىِٕكَةً فِى الْاَرْضِ يَخْلُفُوْنَ ٦٠

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
நாம் நாடினால்
lajaʿalnā
لَجَعَلْنَا
ஆக்கியிருப்போம்
minkum
مِنكُم
உங்களுக்குப் பதிலாக
malāikatan
مَّلَٰٓئِكَةً
வானவர்களை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இந்த பூமியில்
yakhlufūna
يَخْلُفُونَ
வழித்தோன்றி வருவார்கள்
நாம் விரும்பினால் உங்களிலிருந்து மலக்குகளை படைத்து (உங்களை அழித்துப்) பூமியில் உங்களுக்குப் பதிலாக அவர்களை ஆக்கிவிடுவோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬௦)
Tafseer