Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 5

Az-Zukhruf

(az-Zukhruf)

௪௧

فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَۙ ٤١

fa-immā
فَإِمَّا
ஆகவே, ஒன்று
nadhhabanna
نَذْهَبَنَّ
நிச்சயமாக நாம் மரணிக்கச் செய்வோம்
bika
بِكَ
உம்மை
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாம்
min'hum
مِنْهُم
அவர்களிடம்
muntaqimūna
مُّنتَقِمُونَ
பழிவாங்குவோம்
(நபியே! அவர்கள் மத்தியிலிருந்து) உங்களை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௧)
Tafseer
௪௨

اَوْ نُرِيَنَّكَ الَّذِيْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَيْهِمْ مُّقْتَدِرُوْنَ ٤٢

aw nuriyannaka
أَوْ نُرِيَنَّكَ
அல்லது/நாம் உமக்கு காண்பிப்போம்
alladhī waʿadnāhum
ٱلَّذِى وَعَدْنَٰهُمْ
அவர்களுக்கு நாம் வாக்களித்ததை
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
muq'tadirūna
مُّقْتَدِرُونَ
முழு ஆற்றல் உள்ளவர்கள்
அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீங்கள் (உயிருடனிருந்து) உங்களது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடைய வனாகவே இருக்கின்றோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௨)
Tafseer
௪௩

فَاسْتَمْسِكْ بِالَّذِيْٓ اُوْحِيَ اِلَيْكَ ۚاِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٤٣

fa-is'tamsik
فَٱسْتَمْسِكْ
ஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக!
bi-alladhī ūḥiya
بِٱلَّذِىٓ أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டதை
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான(து)
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௩)
Tafseer
௪௪

وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚوَسَوْفَ تُسْٔـَلُوْنَ ٤٤

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
ladhik'run
لَذِكْرٌ
ஒரு சிறப்பாகும்
laka
لَّكَ
உமக்கு(ம்)
waliqawmika
وَلِقَوْمِكَۖ
உமது மக்களுக்கும்
wasawfa tus'alūna
وَسَوْفَ تُسْـَٔلُونَ
உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்
நிச்சயமாக இது உங்களுக்கும், உங்களுடைய மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௪)
Tafseer
௪௫

وَسْٔـَلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَآ ۖ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً يُّعْبَدُوْنَ ࣖ ٤٥

wasal
وَسْـَٔلْ
இன்னும் நீர் விசாரிப்பீராக!
man arsalnā
مَنْ أَرْسَلْنَا
நாம் அனுப்பியவர்களை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
min rusulinā
مِن رُّسُلِنَآ
நமது தூதர்களில்
ajaʿalnā
أَجَعَلْنَا
ஏற்படுத்தி இருக்கின்றோமா?
min dūni l-raḥmāni
مِن دُونِ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானை அன்றி
ālihatan
ءَالِهَةً
கடவுள்களை
yuʿ'badūna
يُعْبَدُونَ
வணங்கப்படுகின்ற(னர்)
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீங்கள் கேளுங்கள். வணங்குவதற்கு ரஹ்மானையன்றி வேறு கடவுள்களை நாம் ஆக்கினோமா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௫)
Tafseer
௪௬

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَآ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَقَالَ اِنِّيْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ٤٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
mūsā
مُوسَىٰ
மூசாவை
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளுடன்
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனது பிரமுகர்களிடம்
faqāla
فَقَالَ
அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
தூதர் ஆவேன்
rabbi
رَبِّ
இறைவனுடைய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
நிச்சயமாக மூஸாவை, நாம் நம்முடைய (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௬)
Tafseer
௪௭

فَلَمَّا جَاۤءَهُمْ بِاٰيٰتِنَآ اِذَا هُمْ مِّنْهَا يَضْحَكُوْنَ ٤٧

falammā
فَلَمَّا
அவர் வந்த போது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது அத்தாட்சிகளுடன்
idhā
إِذَا
அப்போது
hum
هُم
அவர்கள்
min'hā
مِّنْهَا
அவற்றைப் பார்த்து
yaḍḥakūna
يَضْحَكُونَ
சிரித்தார்கள்
அவர், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவைகளை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௭)
Tafseer
௪௮

وَمَا نُرِيْهِمْ مِّنْ اٰيَةٍ اِلَّا هِيَ اَكْبَرُ مِنْ اُخْتِهَاۗ وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٤٨

wamā nurīhim
وَمَا نُرِيهِم
அவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம்
min āyatin
مِّنْ ءَايَةٍ
ஓர் அத்தாட்சியை
illā
إِلَّا
தவிர
hiya
هِىَ
அது
akbaru
أَكْبَرُ
பெரியதாக இருந்தே
min ukh'tihā
مِنْ أُخْتِهَاۖ
அதன் சகோதரியை விட
wa-akhadhnāhum
وَأَخَذْنَٰهُم
இன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
வேதனையால்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அல்லது திரும்புவதற்காக
நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வொரு அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. பின்னும், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (ஆரம்பத்தில் அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௮)
Tafseer
௪௯

وَقَالُوْا يٰٓاَيُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ ٤٩

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினர்
yāayyuha l-sāḥiru
يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ
ஓ சூனியக்காரரே!
ud'ʿu
ٱدْعُ
நீர் பிரார்த்திப்பீராக!
lanā
لَنَا
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
உமது இறைவனிடம்
bimā ʿahida
بِمَا عَهِدَ
அவன் வாக்களித்ததை
ʿindaka innanā
عِندَكَ إِنَّنَا
உம்மிடம்/நிச்சயமாக நாங்கள்
lamuh'tadūna
لَمُهْتَدُونَ
நேர்வழி பெறுவோம்
அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "சூனியக்காரரே! (உங்களது இறைவன் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உங்களுக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ் வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உங்களது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உங்களுடைய) நேரான வழிக்கு வந்து விடுவோம்" என்று கூறினார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௯)
Tafseer
௫௦

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ يَنْكُثُوْنَ ٥٠

falammā kashafnā
فَلَمَّا كَشَفْنَا
நாம் அகற்றும்போது
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டும்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
idhā hum
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
yankuthūna
يَنكُثُونَ
முறித்து விடுகின்றனர்
(அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்து) நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், பின்னும் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫௦)
Tafseer