وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ ٣١
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுகின்றனர்
- lawlā nuzzila
- لَوْلَا نُزِّلَ
- இறக்கப்பட வேண்டாமா!
- hādhā l-qur'ānu
- هَٰذَا ٱلْقُرْءَانُ
- இந்த குர்ஆன்
- ʿalā rajulin
- عَلَىٰ رَجُلٍ
- மனிதர் மீது
- mina l-qaryatayni
- مِّنَ ٱلْقَرْيَتَيْنِ
- இந்த இரண்டு ஊர்களில் உள்ள
- ʿaẓīmin
- عَظِيمٍ
- ஒரு பெரிய(வர்)
அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரிய மனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௧)Tafseer
اَهُمْ يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَۗ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۙ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا ۗوَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ٣٢
- ahum yaqsimūna
- أَهُمْ يَقْسِمُونَ
- அவர்கள் பங்கு வைக்கின்றனரா?
- raḥmata
- رَحْمَتَ
- அருளை
- rabbika
- رَبِّكَۚ
- உமது இறைவனின்
- naḥnu
- نَحْنُ
- நாம்தான்
- qasamnā
- قَسَمْنَا
- பங்குவைத்தோம்.
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- maʿīshatahum
- مَّعِيشَتَهُمْ
- அவர்களது வாழ்க்கையை
- fī l-ḥayati l-dun'yā
- فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
- இவ்வுலக வாழ்வில்
- warafaʿnā
- وَرَفَعْنَا
- இன்னும் உயர்வாக்கினோம்
- baʿḍahum
- بَعْضَهُمْ
- அவர்களில் சிலரை
- fawqa
- فَوْقَ
- மேலாக
- baʿḍin
- بَعْضٍ
- சிலருக்கு
- darajātin
- دَرَجَٰتٍ
- தகுதிகளால்
- liyattakhidha
- لِّيَتَّخِذَ
- எடுத்துக் கொள்வதற்காக
- baʿḍuhum
- بَعْضُهُم
- அவர்களில் சிலர்
- baʿḍan
- بَعْضًا
- சிலரை
- sukh'riyyan
- سُخْرِيًّاۗ
- பணியாளராக
- waraḥmatu
- وَرَحْمَتُ
- அருள்தான்
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனின்
- khayrun
- خَيْرٌ
- மிகச் சிறந்ததாகும்
- mimmā yajmaʿūna
- مِّمَّا يَجْمَعُونَ
- அவர்கள் சேகரிப்பதைவிட
(நபியே!) உங்களின் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள் தாமா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரைவிட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக, (நபித்துவம் என்னும்) உங்களது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதனை அவன் விரும்பிய தன் அடியாருக்குத்தான் அளிப்பான்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௨)Tafseer
وَلَوْلَآ اَنْ يَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ يَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُيُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُوْنَۙ ٣٣
- walawlā
- وَلَوْلَآ
- இல்லையெனில்
- an yakūna
- أَن يَكُونَ
- ஆகிவிடுவார்கள் என்று
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- ummatan
- أُمَّةً
- சமுதாயமாக
- wāḥidatan
- وَٰحِدَةً
- ஒரே ஒரு
- lajaʿalnā
- لَّجَعَلْنَا
- ஆக்கியிருப்போம்
- liman yakfuru
- لِمَن يَكْفُرُ
- நிராகரிப்பவர்களுக்கு
- bil-raḥmāni
- بِٱلرَّحْمَٰنِ
- ரஹ்மானை
- libuyūtihim
- لِبُيُوتِهِمْ
- அவர்களின் வீடுகளுக்கு
- suqufan
- سُقُفًا
- முகடுகளை(யும்)
- min fiḍḍatin
- مِّن فِضَّةٍ
- வெள்ளியினால் ஆன
- wamaʿārija
- وَمَعَارِجَ
- ஏணிகளையும்
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- yaẓharūna
- يَظْهَرُونَ
- ஏறுவார்கள்
(இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கும்) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானை நிராகரிப்ப வர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கி விடுவோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௩)Tafseer
وَلِبُيُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔوْنَۙ ٣٤
- walibuyūtihim
- وَلِبُيُوتِهِمْ
- இன்னும் அவர்களின் வீடுகளுக்கு
- abwāban
- أَبْوَٰبًا
- கதவுகளையும்
- wasururan
- وَسُرُرًا
- கட்டில்களையும்
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் மீது
- yattakiūna
- يَتَّكِـُٔونَ
- அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்
அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௪)Tafseer
وَزُخْرُفًاۗ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِيْنَ ࣖ ٣٥
- wazukh'rufan
- وَزُخْرُفًاۚ
- இன்னும் தங்கத்தையும்
- wa-in kullu
- وَإِن كُلُّ
- எல்லாம் இல்லை
- dhālika
- ذَٰلِكَ
- இவை
- lammā matāʿu
- لَمَّا مَتَٰعُ
- இன்பங்களே தவிர
- l-ḥayati l-dun'yā
- ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
- உலக வாழ்க்கையின்
- wal-ākhiratu
- وَٱلْءَاخِرَةُ
- மறுமை
- ʿinda rabbika
- عِندَ رَبِّكَ
- உமது இறைவனிடம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களுக்கு
(வெள்ளி என்ன! இவைகளைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்.) ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக் கூடிய) அற்ப இன்பங்களே அன்றி வேறில்லை. உங்களது இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௫)Tafseer
وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ ٣٦
- waman yaʿshu
- وَمَن يَعْشُ
- யார் புறக்கணிப்பாரோ
- ʿan dhik'ri
- عَن ذِكْرِ
- நினைவு கூர்வதை
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளனை
- nuqayyiḍ
- نُقَيِّضْ
- நாம் சாட்டிவிடுவோம்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- shayṭānan
- شَيْطَٰنًا
- ஒரு ஷைத்தானை
- fahuwa lahu
- فَهُوَ لَهُۥ
- அவன் அவருக்கு
- qarīnun
- قَرِينٌ
- நண்பனாக
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௬)Tafseer
وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ٣٧
- wa-innahum
- وَإِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- layaṣuddūnahum
- لَيَصُدُّونَهُمْ
- அவர்களை தடுக்கின்றனர்
- ʿani l-sabīli
- عَنِ ٱلسَّبِيلِ
- பாதையிலிருந்து
- wayaḥsabūna
- وَيَحْسَبُونَ
- இன்னும் எண்ணுகிறார்கள்
- annahum
- أَنَّهُم
- நிச்சயமாக தாங்கள்
- muh'tadūna
- مُّهْتَدُونَ
- நேர்வழி நடப்பவர்கள்தான்
நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தாம்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௭)Tafseer
حَتّٰىٓ اِذَا جَاۤءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِيْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ ٣٨
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā
- إِذَا
- அவன் வரும் போது
- jāanā
- جَآءَنَا
- அவன் வரும் போது நம்மிடம்
- qāla
- قَالَ
- கூறுவான்
- yālayta
- يَٰلَيْتَ
- இருக்க வேண்டுமே!
- baynī
- بَيْنِى
- எனக்கு மத்தியிலும்
- wabaynaka
- وَبَيْنَكَ
- உனக்கு மத்தியிலும்
- buʿ'da
- بُعْدَ
- இடைப்பட்ட தூரம்
- l-mashriqayni
- ٱلْمَشْرِقَيْنِ
- கிழக்கிற்கும் மேற்கிற்கும்
- fabi'sa l-qarīnu
- فَبِئْسَ ٱلْقَرِينُ
- அவன் மிகக் கெட்ட நண்பன்
நம்மிடம் (வரும் வரையில்தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) "எனக்கும் உமக்கு மிடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலைதூரமாக இருந்திருக்க வேண்டாமா?" என்றும், "(எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்" என்றும் கூறுவார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௮)Tafseer
وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ٣٩
- walan yanfaʿakumu
- وَلَن يَنفَعَكُمُ
- உங்களுக்கு அறவே பலனளிக்காது
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்றைய தினம்
- idh ẓalamtum
- إِذ ظَّلَمْتُمْ
- நீங்கள் அநியாயம் செய்த காரணத்தால்
- annakum
- أَنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- fī l-ʿadhābi
- فِى ٱلْعَذَابِ
- வேதனையில்
- mush'tarikūna
- مُشْتَرِكُونَ
- இணைந்திருப்பது
(அதற்கு அவர்களை நோக்கி) "நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தாம்" (என்றும் கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௯)Tafseer
اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِى الْعُمْيَ وَمَنْ كَانَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٤٠
- afa-anta tus'miʿu
- أَفَأَنتَ تُسْمِعُ
- நீர் செவி ஏற்க வைக்க முடியுமா?
- l-ṣuma
- ٱلصُّمَّ
- அந்த செவிடர்களை
- aw
- أَوْ
- அல்லது
- tahdī
- تَهْدِى
- நீர் நேர்வழி நடத்திட முடியுமா?
- l-ʿum'ya
- ٱلْعُمْىَ
- அந்த குருடர்களை
- waman kāna
- وَمَن كَانَ
- இன்னும் இருப்பவர்களை
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
(நபியே!) நீங்கள் செவிடனைக் கேட்கும்படி செய்து விடுவீர்களா? அல்லது குருடனை (அல்லது மனமுரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனை நேரான வழியில் நீங்கள் செலுத்தி விடுவீர்களா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௦)Tafseer