Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 3

Az-Zukhruf

(az-Zukhruf)

௨௧

اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ٢١

am ātaynāhum
أَمْ ءَاتَيْنَٰهُمْ
?/நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
min qablihi
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
fahum
فَهُم
அவர்கள்
bihi
بِهِۦ
அதை
mus'tamsikūna
مُسْتَمْسِكُونَ
பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்
அல்லது (அவர்கள் சொல்வது போன்று) யாதொரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதனை அவர்கள் இதற்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கின்றனரா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௧)
Tafseer
௨௨

بَلْ قَالُوْٓا اِنَّا وَجَدْنَآ اٰبَاۤءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ٢٢

bal
بَلْ
மாறாக
qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறுகின்றனர்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
wajadnā
وَجَدْنَآ
கண்டோம்
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
ʿalā ummatin
عَلَىٰٓ أُمَّةٍ
ஒரு கொள்கையில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகள் மீதே
muh'tadūna
مُّهْتَدُونَ
நேர்வழி நடப்போம்
அன்று! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவ தெல்லாம் நாங்கள் "எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கின்றோம்" என்பதுதான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௨)
Tafseer
௨௩

وَكَذٰلِكَ مَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍۙ اِلَّا قَالَ مُتْرَفُوْهَآ ۙاِنَّا وَجَدْنَآ اٰبَاۤءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ٢٣

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறு
mā arsalnā
مَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பியதில்லை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
fī qaryatin
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
min nadhīrin
مِّن نَّذِيرٍ
எந்த ஓர் எச்சரிப்பாளரையும்
illā qāla
إِلَّا قَالَ
கூறியே தவிர
mut'rafūhā
مُتْرَفُوهَآ
அதன் செல்வந்தர்கள்
innā wajadnā
إِنَّا وَجَدْنَآ
நிச்சயமாக நாம் கண்டோம்
ābāanā
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
ʿalā ummatin
عَلَىٰٓ أُمَّةٍ
ஒரு கொள்கையில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகளை
muq'tadūna
مُّقْتَدُونَ
பின்பற்றி நடப்போம்
இவ்வாறே உங்களுக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எவ்வூராரிடம் அனுப்பி வைத்தோமோ, அங்குள்ள தலைவர்களும் "நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே செல்வோம்" என்று கூறாமல் இருக்கவில்லை. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௩)
Tafseer
௨௪

۞ قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰى مِمَّا وَجَدْتُّمْ عَلَيْهِ اٰبَاۤءَكُمْۗ قَالُوْٓا اِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ٢٤

qāla
قَٰلَ
கூறினார்
awalaw ji'tukum
أَوَلَوْ جِئْتُكُم
நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா
bi-ahdā
بِأَهْدَىٰ
மிகச் சிறந்த நேர்வழியை
mimmā wajadttum
مِمَّا وَجَدتُّمْ
எதைவிட/ கண்டீர்களோ
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
ābāakum
ءَابَآءَكُمْۖ
உங்கள் மூதாதைகளை
qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
bimā ur'sil'tum
بِمَآ أُرْسِلْتُم
நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
bihi kāfirūna
بِهِۦ كَٰفِرُونَ
அதை/ நிராகரிப்பவர்கள்
(அதற்கு, அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "உங்கள் மூதாதைகள் இருந்ததை விட நான் நேரான வழியைக் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்றும் கூறினார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௪)
Tafseer
௨௫

فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ࣖ ٢٥

fa-intaqamnā
فَٱنتَقَمْنَا
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
min'hum
مِنْهُمْۖ
அவர்களிடம்
fa-unẓur
فَٱنظُرْ
ஆக, நீர் கவனிப்பீராக!
kayfa
كَيْفَ
எப்படி
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களின்
ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௫)
Tafseer
௨௬

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖٓ اِنَّنِيْ بَرَاۤءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ ٢٦

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
இப்ராஹீம்
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கு(ம்)
waqawmihi
وَقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கும்
innanī barāon
إِنَّنِى بَرَآءٌ
நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்
mimmā taʿbudūna
مِّمَّا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்
இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௬)
Tafseer
௨௭

اِلَّا الَّذِيْ فَطَرَنِيْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ ٢٧

illā alladhī faṭaranī
إِلَّا ٱلَّذِى فَطَرَنِى
என்னைப் படைத்தவனைத் தவிர
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
sayahdīni
سَيَهْدِينِ
எனக்கு நேர்வழி காட்டுவான்
எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்.) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்" (என்றும் கூறினார்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௭)
Tafseer
௨௮

وَجَعَلَهَا كَلِمَةً ۢ بَاقِيَةً فِيْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۗ ٢٨

wajaʿalahā
وَجَعَلَهَا
இதை ஆக்கினார்
kalimatan
كَلِمَةًۢ
ஒரு வாக்கியமாக
bāqiyatan
بَاقِيَةً
நீடித்து இருக்கின்ற(து)
fī ʿaqibihi
فِى عَقِبِهِۦ
தனது சந்ததிகளில்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக
ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) வரும் பொருட்டு, அவர் தன்னுடைய சந்ததிகளில் இக் கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௮)
Tafseer
௨௯

بَلْ مَتَّعْتُ هٰٓؤُلَاۤءِ وَاٰبَاۤءَهُمْ حَتّٰى جَاۤءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِيْنٌ ٢٩

bal
بَلْ
மாறாக
mattaʿtu
مَتَّعْتُ
நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு(ம்)
waābāahum
وَءَابَآءَهُمْ
மூதாதைகளுக்கும் இவர்களின்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
jāahumu
جَآءَهُمُ
வந்தது அவர்களிடம்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
warasūlun
وَرَسُولٌ
தூதரும்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் பெற்றோற்களாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நம்முடைய இந்தத்) தூதரும் வரும் வரையில், அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௯)
Tafseer
௩௦

وَلَمَّا جَاۤءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ٣٠

walammā
وَلَمَّا
வந்த போது
jāahumu
جَآءَهُمُ
அவர்களிடம்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
hādhā siḥ'run
هَٰذَا سِحْرٌ
இது சூனியம்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
bihi
بِهِۦ
இதை
kāfirūna
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்
அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் இதனை "(இது) சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கின்றோம்" என்று கூறுகின்றனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௦)
Tafseer