Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 2

Az-Zukhruf

(az-Zukhruf)

௧௧

وَالَّذِيْ نَزَّلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۢ بِقَدَرٍۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّيْتًا ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ ١١

wa-alladhī
وَٱلَّذِى
இன்னும் எப்படிப்பட்டவன்
nazzala
نَزَّلَ
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءًۢ
மழையை
biqadarin
بِقَدَرٍ
ஓர் அளவோடு
fa-ansharnā
فَأَنشَرْنَا
ஆக, நாம் உயிர்ப்பிக்கின்றோம்
bihi baldatan
بِهِۦ بَلْدَةً
அதன் மூலம்/பூமியை
maytan
مَّيْتًاۚ
இறந்து போன
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
tukh'rajūna
تُخْرَجُونَ
நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்
அவன் தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கின்றான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தாம், பின்னர் அதனைக் கொண்டு (மழையை பொழியச் செய்து) வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளி யேற்றப்படுவீர்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௧)
Tafseer
௧௨

وَالَّذِيْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَۙ ١٢

wa-alladhī khalaqa
وَٱلَّذِى خَلَقَ
இன்னும் எப்படிப்பட்டவன்/ அவன் படைத்தான்
l-azwāja
ٱلْأَزْوَٰجَ
ஜோடிகள்
kullahā
كُلَّهَا
எல்லாவற்றையும்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
lakum
لَكُم
உங்களுக்கு
mina l-ful'ki
مِّنَ ٱلْفُلْكِ
கப்பல்களிலும்
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
கால்நடைகளிலும்
mā tarkabūna
مَا تَرْكَبُونَ
நீங்கள் பயணம் செய்கின்றவற்றை
அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் ஏறிச் செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௨)
Tafseer
௧௩

لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ ١٣

litastawū
لِتَسْتَوُۥا۟
நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்
ʿalā ẓuhūrihi
عَلَىٰ ظُهُورِهِۦ
அவற்றின்முதுகுகளில்
thumma
ثُمَّ
பிறகு
tadhkurū
تَذْكُرُوا۟
நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்
niʿ'mata
نِعْمَةَ
அருட்கொடையை
rabbikum
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
idhā is'tawaytum
إِذَا ٱسْتَوَيْتُمْ
நீங்கள் ஸ்திரமாக அமரும்போது
ʿalayhi
عَلَيْهِ
அவற்றின் மீது
wataqūlū
وَتَقُولُوا۟
இன்னும் நீங்கள் கூறுவதற்காக
sub'ḥāna
سُبْحَٰنَ
மகா தூயவன்
alladhī sakhara
ٱلَّذِى سَخَّرَ
வசப்படுத்தி தந்தவன்
lanā
لَنَا
எங்களுக்கு
hādhā
هَٰذَا
இதை
wamā kunnā
وَمَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
lahu
لَهُۥ
இதை
muq'rinīna
مُقْرِنِينَ
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக
ஆகவே, அவைகளின் முதுகுகளின் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன்மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து "இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவன் மிக்க பரிசுத்தவான்" என்றும், ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௩)
Tafseer
௧௪

وَاِنَّآ اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ١٤

wa-innā
وَإِنَّآ
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
lamunqalibūna
لَمُنقَلِبُونَ
திரும்புகின்றவர்கள்
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்" என்றும் கூறுவீர்களாக! ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௪)
Tafseer
௧௫

وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ۗاِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِيْنٌ ۗ ࣖ ١٥

wajaʿalū
وَجَعَلُوا۟
அவர்கள் ஆக்கிவிட்டனர்
lahu
لَهُۥ
அவனுக்கு
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦ
அவனது அடியார்களில்
juz'an
جُزْءًاۚ
சிலரை
inna l-insāna
إِنَّ ٱلْإِنسَٰنَ
நிச்சயமாக மனிதன்
lakafūrun
لَكَفُورٌ
மகா நன்றி கெட்டவன்
mubīnun
مُّبِينٌ
மிகத் தெளிவான
(இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள மலக்குக)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகின்றார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௫)
Tafseer
௧௬

اَمِ اتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِيْنَ ۗ ١٦

ami ittakhadha
أَمِ ٱتَّخَذَ
எடுத்துக்கொண்டானா
mimmā yakhluqu
مِمَّا يَخْلُقُ
தான் படைத்தவற்றில்
banātin
بَنَاتٍ
பெண் பிள்ளைகளை
wa-aṣfākum
وَأَصْفَىٰكُم
இன்னும் உங்களுக்கு தேர்தெடுத்(துக் கொடுத்)தானா?
bil-banīna
بِٱلْبَنِينَ
ஆண் பிள்ளைகளை
(இறைவன்) தான் படைத்த (மலக்குகளாகிய) இவர்களை(த் தனக்குப்) பெண் மக்களாக எடுத்துக்கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு ஆண் மக்களை அளித்தானோ? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௬)
Tafseer
௧௭

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ ١٧

wa-idhā bushira
وَإِذَا بُشِّرَ
நற்செய்தி கூறப்பட்டால்
aḥaduhum
أَحَدُهُم
ஒருவருக்கு அவர்களில்
bimā ḍaraba
بِمَا ضَرَبَ
எதை/அவர் விவரித்தாரோ
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
mathalan
مَثَلًا
தன்மையாக
ẓalla
ظَلَّ
மாறிவிடுகிறது
wajhuhu
وَجْهُهُۥ
அவரது முகம்
mus'waddan
مُسْوَدًّا
கருப்பாக
wahuwa kaẓīmun
وَهُوَ كَظِيمٌ
அவர்/துக்கப்படுகிறார்
(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகின்றது. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௭)
Tafseer
௧௮

اَوَمَنْ يُّنَشَّؤُا فِى الْحِلْيَةِ وَهُوَ فِى الْخِصَامِ غَيْرُ مُبِيْنٍ ١٨

awaman yunasha-u
أَوَمَن يُنَشَّؤُا۟
?/யார் வளர்க்கப்படுகிறாரோ
fī l-ḥil'yati
فِى ٱلْحِلْيَةِ
ஆபரணங்களில்
wahuwa
وَهُوَ
இன்னும் அவர்
fī l-khiṣāmi
فِى ٱلْخِصَامِ
வாதிப்பதில்
ghayru mubīnin
غَيْرُ مُبِينٍ
தெளிவற்றவராக
என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்திலும், (சிங்காரிப்பிலும்) வளர்ந்து வரும் (அவர்கள் இழிவாகக் கருதும் பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௮)
Tafseer
௧௯

وَجَعَلُوا الْمَلٰۤىِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ۗ اَشَهِدُوْا خَلْقَهُمْ ۗسَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْٔـَلُوْنَ ١٩

wajaʿalū
وَجَعَلُوا۟
இவர்கள் ஆக்கிவிட்டனர்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
alladhīna hum
ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
ʿibādu
عِبَٰدُ
அடியார்களாகிய
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
ināthan
إِنَٰثًاۚ
பெண்களாக
ashahidū
أَشَهِدُوا۟
பார்த்தார்களா?
khalqahum
خَلْقَهُمْۚ
அவர்கள் படைக்கப்பட்டதை
satuk'tabu
سَتُكْتَبُ
பதியப்படும்
shahādatuhum
شَهَٰدَتُهُمْ
இவர்களின் சாட்சி
wayus'alūna
وَيُسْـَٔلُونَ
இன்னும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்
தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களை படைக்கும் போது இவர்கள் (நம்மோடிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவைகளெல்லாம் (நம்முடைய பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதனைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௯)
Tafseer
௨௦

وَقَالُوْا لَوْ شَاۤءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ۗمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَۗ ٢٠

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுகின்றனர்
law shāa
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
mā ʿabadnāhum
مَا عَبَدْنَٰهُمۗ
நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்.
mā lahum
مَّا لَهُم
இவர்களுக்கு இல்லை
bidhālika
بِذَٰلِكَ
இதைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍۖ
எந்த அறிவும்
in hum
إِنْ هُمْ
இவர்கள் இல்லை
illā yakhruṣūna
إِلَّا يَخْرُصُونَ
தவிர/கற்பனை செய்கின்றவர்களே
தவிர, ரஹ்மான் நாடியிருந்தால் அவனையன்றி நாம் (மலக்குகளை) வணங்கியே இருக்கமாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்கவாதம் செய்பவர்களேயன்றி, (செயலைப் பற்றி) அவர்களுக்கு யாதொரு அறிவும் இல்லை. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨௦)
Tafseer