௧
௨
وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۙ ٢
- wal-kitābi
- وَٱلْكِتَٰبِ
- வேதத்தின் மீது சத்தியமாக!
- l-mubīni
- ٱلْمُبِينِ
- தெளிவான
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக! ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௨)Tafseer
௩
اِنَّا جَعَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَۚ ٣
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- jaʿalnāhu
- جَعَلْنَٰهُ
- இதை ஆக்கினோம்
- qur'ānan
- قُرْءَٰنًا
- குர்ஆனாக
- ʿarabiyyan
- عَرَبِيًّا
- அரபி மொழி
- laʿallakum taʿqilūna
- لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக
(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்களுடைய) அரபி மொழியில் அமைத்தோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩)Tafseer
௪
وَاِنَّهٗ فِيْٓ اُمِّ الْكِتٰبِ لَدَيْنَا لَعَلِيٌّ حَكِيْمٌ ۗ ٤
- wa-innahu
- وَإِنَّهُۥ
- இன்னும் நிச்சயமாக இது
- fī ummi l-kitābi
- فِىٓ أُمِّ ٱلْكِتَٰبِ
- தாய் புத்தகத்தில் உள்ளதும்
- ladaynā
- لَدَيْنَا
- நம்மிடம் உள்ள
- laʿaliyyun
- لَعَلِىٌّ
- மிக உயர்ந்ததும்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானமுடையதும்
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪)Tafseer
௫
اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِيْنَ ٥
- afanaḍribu ʿankumu l-dhik'ra
- أَفَنَضْرِبُ عَنكُمُ ٱلذِّكْرَ
- விட்டுவிடுவோமா/உங்களைப் பற்றி/கூறுவதை
- ṣafḥan
- صَفْحًا
- மன்னித்து
- an kuntum
- أَن كُنتُمْ
- நீங்களோ இருக்க
- qawman
- قَوْمًا
- மக்களாக
- mus'rifīna
- مُّسْرِفِينَ
- வரம்பு மீறுகின்ற(வர்கள்)
நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதையும் விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௫)Tafseer
௬
وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِيٍّ فِى الْاَوَّلِيْنَ ٦
- wakam
- وَكَمْ
- எத்தனையோ
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- min nabiyyin
- مِن نَّبِىٍّ
- நபிமார்களை
- fī l-awalīna
- فِى ٱلْأَوَّلِينَ
- முந்தியவர்களில்
(உங்களைப் போன்று வரம்பு மீறிச்) சென்றுபோன உங்கள் முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி யிருக்கின்றோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௬)Tafseer
௭
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ نَّبِيٍّ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٧
- wamā yatīhim
- وَمَا يَأْتِيهِم
- அவர்களிடம் வருவதில்லை
- min nabiyyin
- مِّن نَّبِىٍّ
- எந்த ஒரு நபியும்
- illā
- إِلَّا
- தவிர
- kānū
- كَانُوا۟
- அவர்கள் இருந்தே
- bihi
- بِهِۦ
- அவரை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- அவர்கள் பரிகாசம் செய்கின்றவர்களாக
(எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௭)Tafseer
௮
فَاَهْلَكْنَٓا اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰى مَثَلُ الْاَوَّلِيْنَ ٨
- fa-ahlaknā
- فَأَهْلَكْنَآ
- ஆகவேஅழித்தோம்
- ashadda
- أَشَدَّ
- மிக பலமானவர்களை
- min'hum
- مِنْهُم
- இவர்களைவிட
- baṭshan
- بَطْشًا
- வலிமையால்
- wamaḍā
- وَمَضَىٰ
- சென்றிருக்கிறது
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முந்தியவர்களின்
இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின் பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௮)Tafseer
௯
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِيْزُ الْعَلِيْمُۙ ٩
- wala-in
- وَلَئِن
- sa-altahum
- سَأَلْتَهُم
- நீர் அவர்களிடம் கேட்டால்
- man khalaqa
- مَّنْ خَلَقَ
- யார் படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக கூறுவார்கள்
- khalaqahunna
- خَلَقَهُنَّ
- அவற்றைப் படைத்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதனை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௯)Tafseer
௧௦
الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۚ ١٠
- alladhī jaʿala
- ٱلَّذِى جَعَلَ
- எப்படிப்பட்டவன்/அவன் ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- mahdan
- مَهْدًا
- விரிப்பாக
- wajaʿala
- وَجَعَلَ
- இன்னும் ஏற்படுத்தினான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- அதில்
- subulan
- سُبُلًا
- பாதைகளை
- laʿallakum tahtadūna
- لَّعَلَّكُمْ تَهْتَدُونَ
- நீங்கள் சரியான பாதையில் செல்வதற்காக
அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௧௦)Tafseer