குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௯
Qur'an Surah Ash-Shuraa Verse 9
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۚ فَاللّٰهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِ الْمَوْتٰى ۖوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ (الشورى : ٤٢)
- ami ittakhadhū
- أَمِ ٱتَّخَذُوا۟
- Or have they taken
- அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- besides Him besides Him
- அவனையன்றி
- awliyāa
- أَوْلِيَآءَۖ
- protectors?
- பாதுகாவலர்களை
- fal-lahu huwa
- فَٱللَّهُ هُوَ
- But Allah He
- அல்லாஹ்தான்
- l-waliyu
- ٱلْوَلِىُّ
- (is) the Protector
- பாதுகாவலன்
- wahuwa
- وَهُوَ
- and He
- இன்னும் அவன்தான்
- yuḥ'yī
- يُحْىِ
- gives life
- உயிர்ப்பிப்பான்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- (to) the dead
- இறந்தவர்களை
- wahuwa
- وَهُوَ
- And He
- இன்னும் அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) on every thing
- எல்லாவற்றின் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Amit takhazoo min dooniheee awliyaaa'a fallaahu Huwal Waliyyu wa Huwa yuhyil mawtaa wa Huwa 'alaa kulli shai'in Qadeer(QS. aš-Šūrā:9)
English Sahih International:
Or have they taken protectors [or allies] besides Him? But Allah – He is the Protector, and He gives life to the dead, and He is over all things competent. (QS. Ash-Shuraa, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் ஒருவன்தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௯)
Jan Trust Foundation
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.