Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௮

Qur'an Surah Ash-Shuraa Verse 8

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ (الشورى : ٤٢)

walaw shāa
وَلَوْ شَآءَ
And if Allah willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah willed
அல்லாஹ்
lajaʿalahum
لَجَعَلَهُمْ
He could have made them
அவர்களை ஆக்கியிருப்பான்
ummatan
أُمَّةً
a community
மார்க்கமுடையவர்களாக
wāḥidatan
وَٰحِدَةً
one
ஒரே ஒரு
walākin
وَلَٰكِن
but
என்றாலும்
yud'khilu
يُدْخِلُ
He admits
நுழைக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடியவர்களை
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
in (to) His Mercy
தனது அருளில்
wal-ẓālimūna
وَٱلظَّٰلِمُونَ
And the wrongdoers
அநியாயக்காரர்கள்
mā lahum
مَا لَهُم
not for them
அவர்களுக்கு இல்லை
min waliyyin
مِّن وَلِىٍّ
any protector
எந்த பாதுகாவலரும்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
and not any helper
எந்த உதவியாளரும் இல்லை

Transliteration:

Wa law shaaa'al laahu laja'alahum ummatanw waahi datanw walaakiny yudkhilumany yashaaa'u fee rahmatih; waz zaalimoona maa lahum minw waliyyinw wa laa naseer (QS. aš-Šūrā:8)

English Sahih International:

And if Allah willed, He could have made them [of] one religion, but He admits whom He wills into His mercy. And the wrongdoers have not any protector or helper. (QS. Ash-Shuraa, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௮)

Jan Trust Foundation

அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன் தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கின்றான். அநியாயக்காரர்கள் - அவர்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.