குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௫௩
Qur'an Surah Ash-Shuraa Verse 53
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
صِرَاطِ اللّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اَلَآ اِلَى اللّٰهِ تَصِيْرُ الْاُمُوْرُ ࣖ (الشورى : ٤٢)
- ṣirāṭi
- صِرَٰطِ
- (The) path
- பாதையின் பக்கம்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- alladhī
- ٱلَّذِى
- the One
- எப்படிப்பட்டவன்
- lahu
- لَهُۥ
- to Whom
- அவனுக்கே
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- (belongs) whatever (is) in the heavens
- வானங்களில் உள்ளவை
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۗ
- and whatever (is) in the earth
- இன்னும் பூமியில் உள்ளவை(யும்)
- alā
- أَلَآ
- Unquestionably!
- அறிந்துகொள்ளுங்கள்!
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- To Allah
- அல்லாஹ்வின் பக்கமே
- taṣīru
- تَصِيرُ
- reach
- திரும்புகின்றன
- l-umūru
- ٱلْأُمُورُ
- all affairs
- காரியங்கள்
Transliteration:
Siraatil laahil lazee lahoo maa fis samaawaati wa maa fil ard; alaaa ilal laahi taseerul umoor(QS. aš-Šūrā:53)
English Sahih International:
The path of Allah, to whom belongs whatever is in the heavens and whatever is on the earth. Unquestionably, to Allah do [all] matters evolve [i.e., return]. (QS. Ash-Shuraa, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவைகள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமான வைகளே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்! (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௫௩)
Jan Trust Foundation
(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் பாதையின் பக்கம் (நீர் நேர்வழி காட்டுகின்றீர்). அவனுக்கே வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் உரியவையாகும். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் (எல்லாம்) திரும்புகின்றன.