Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௫௦

Qur'an Surah Ash-Shuraa Verse 50

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚوَيَجْعَلُ مَنْ يَّشَاۤءُ عَقِيْمًا ۗاِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ (الشورى : ٤٢)

aw
أَوْ
Or
அல்லது
yuzawwijuhum
يُزَوِّجُهُمْ
He grants them
அவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான்
dhuk'rānan
ذُكْرَانًا
males
ஆண் பிள்ளைகளை
wa-ināthan
وَإِنَٰثًاۖ
and females;
இன்னும் பெண் பிள்ளைகளை
wayajʿalu
وَيَجْعَلُ
and He makes
இன்னும் ஆக்குகின்றான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடுகின்றவர்களை
ʿaqīman
عَقِيمًاۚ
barren
மலடுகளாக
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Aw yuzawwijuhum zukraananw wa inaasanw wa yaj'alu mai yashaaa'u 'aqeemaa; innahoo 'Aleemun Qadeer (QS. aš-Šūrā:50)

English Sahih International:

Or He makes them [both] males and females, and He renders whom He wills barren. Indeed, He is Knowing and Competent. (QS. Ash-Shuraa, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி, அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது அவர்களுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் கலந்து கொடுக்கின்றான். தான் நாடுகின்றவர்களை மலடுகளாக ஆக்குகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்.