Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௫

Qur'an Surah Ash-Shuraa Verse 5

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰۤىِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِۗ اَلَآ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (الشورى : ٤٢)

takādu
تَكَادُ
Almost
நெருங்கி விடுகின்றன
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
the heavens
வானங்கள்
yatafaṭṭarna
يَتَفَطَّرْنَ
break up
(அவை) பிளந்துவிடுவதற்கு
min fawqihinna
مِن فَوْقِهِنَّۚ
from above them
அவற்றுக்கு மேல் உள்ள
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
and the Angels
வானவர்கள்
yusabbiḥūna
يُسَبِّحُونَ
glorify
துதிக்கின்றனர்
biḥamdi
بِحَمْدِ
(the) praise
புகழ்ந்து
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனை
wayastaghfirūna
وَيَسْتَغْفِرُونَ
and ask for forgiveness
இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர்
liman fī l-arḍi
لِمَن فِى ٱلْأَرْضِۗ
for those on the earth
பூமியில் உள்ளவர்களுக்காக
alā
أَلَآ
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
inna l-laha huwa
إِنَّ ٱللَّهَ هُوَ
indeed Allah He
நிச்சயமாக அல்லாஹ்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
(is) the Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
மகாக் கருணையாளன்

Transliteration:

Takaadus samaawaatu yatafattarna min fawqihinn; walmalaaa'ikatu yusabbihoona bihamdi Rabbihim wa yastaghfiroona liman fil ard; alaaa innal laaha huwal Ghafoorur Raheem (QS. aš-Šūrā:5)

English Sahih International:

The heavens almost break from above them, and the angels exalt [Allah] with praise of their Lord and ask forgiveness for those on earth. Unquestionably, it is Allah who is the Forgiving, the Merciful. (QS. Ash-Shuraa, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) மலக்குகளும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௫)

Jan Trust Foundation

அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் மகிமையால்) பிளந்துவிடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றனர். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கின்றனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகாக் கருணையாளன்.