Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௮

Qur'an Surah Ash-Shuraa Verse 48

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ اَعْرَضُوْا فَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ۗاِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ ۗوَاِنَّآ اِذَآ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚوَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ (الشورى : ٤٢)

fa-in aʿraḍū
فَإِنْ أَعْرَضُوا۟
Then if they turn away
அவர்கள் புறக்கணித்தால்
famā arsalnāka
فَمَآ أَرْسَلْنَٰكَ
then not We have sent you
நாம் உம்மை அனுப்பவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًاۖ
(as) a guardian
கண்காணிப்பவராக
in ʿalayka
إِنْ عَلَيْكَ
Not (is) on you
உம்மீது கடமை இல்லை
illā
إِلَّا
except
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُۗ
the conveyance
எடுத்துரைப்பதை
wa-innā
وَإِنَّآ
And indeed
நிச்சயமாக நாம்
idhā adhaqnā
إِذَآ أَذَقْنَا
when We cause to taste
சுவைக்க வைத்தால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
[the] man
மனிதர்களுக்கு
minnā
مِنَّا
from Us
நம்மிடமிருந்து
raḥmatan
رَحْمَةً
Mercy
ஓர் அருளை
fariḥa
فَرِحَ
he rejoices
அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்)
bihā
بِهَاۖ
in it
அதனால்
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
But if befalls them
அவர்களுக்கு ஏற்பட்டால்
sayyi-atun
سَيِّئَةٌۢ
evil
ஒரு தீங்கு
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
for what have sent forth
முற்படுத்தியதால்
aydīhim
أَيْدِيهِمْ
their hands
அவர்களின் கரங்கள்
fa-inna l-insāna
فَإِنَّ ٱلْإِنسَٰنَ
then indeed [the] man
நிச்சயமாக மனிதன்
kafūrun
كَفُورٌ
(is) ungrateful
மிகப்பெரிய நிராகரிப்பாளன்

Transliteration:

Fa-in a'radoo famaaa arsalnaaka 'alaihim hafeezan in 'alaika illal balaagh; wa innaaa izaaa azaqnal insaana minnaa rahmatan fariha bihaa wa in tusibhum saiyi'atum bimaa qaddamat aydeehim fa innal insaana kafoor (QS. aš-Šūrā:48)

English Sahih International:

But if they turn away – then We have not sent you, [O Muhammad], over them as a guardian; upon you is only [the duty of] notification. And indeed, when We let man taste mercy from Us, he rejoices in it; but if evil afflicts him for what his hands have put forth, then indeed, man is ungrateful. (QS. Ash-Shuraa, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்துவிட்டால், (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உங்களை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உங்கள்மீது கடமை அல்ல. நம்முடைய அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப்பற்றி அவன் சந்தோஷப்படுகின்றான். அவனுடைய கரங்களே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கு யாதேனுமொரு தீங்கு ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாகி (இறைவனையே நிராகரிக்கவும் தலைப்பட்டு) விடுகின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறு ஏதும்) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகின்றனர். ஏனெனில்) நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளன் ஆவான்.