Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௭

Qur'an Surah Ash-Shuraa Verse 47

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِسْتَجِيْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ ۗمَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ يَّوْمَىِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِيْرٍ (الشورى : ٤٢)

is'tajībū
ٱسْتَجِيبُوا۟
Respond
நீங்கள்பதில் அளியுங்கள்!
lirabbikum
لِرَبِّكُم
to your Lord
உங்கள் இறைவனுக்கு
min qabli
مِّن قَبْلِ
before before
முன்
an yatiya
أَن يَأْتِىَ
[that] comes
வருவதற்கு
yawmun
يَوْمٌ
a Day
ஒரு நாள்
lā maradda
لَّا مَرَدَّ
(there is) no averting
அறவே தடுத்துவிட முடியாது
lahu
لَهُۥ
for it
அதை
mina l-lahi
مِنَ ٱللَّهِۚ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
mā lakum
مَا لَكُم
Not (is) for you
உங்களுக்கு இருக்காது
min malja-in
مِّن مَّلْجَإٍ
any refuge
ஒதுங்குமிடம் எதுவும்
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
wamā lakum
وَمَا لَكُم
and not for you
இன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார்
min nakīrin
مِّن نَّكِيرٍ
any denial
தடுப்பவர் யாரும்

Transliteration:

Istajeeboo li Rabbikum min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laah; maa lakum mim malja iny yawma'izinw wa maa lakum min nakeer (QS. aš-Šūrā:47)

English Sahih International:

Respond to your Lord before a Day comes from Allah of which there is no repelling. No refuge will you have that Day, nor for you will there be any denial. (QS. Ash-Shuraa, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது; (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விடமிருந்து ஒரு நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்கு (-அவன் அனுப்பிய தூதருக்கு) நீங்கள் பதில் அளியுங்கள்! (இஸ்லாமிற்குள் நுழைந்து விடுங்கள்!) அதை (-அந்த நாளை) அறவே தடுத்துவிட முடியாது. அந்நாளில் (தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) உங்களுக்கு ஒதுங்குமிடம் ஏதும் இருக்காது. (உங்களை விட்டும் அந்த தண்டனையை) தடுப்பவர் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார். (அதை உங்களாலும் மாற்றிவிட முடியாது.)