குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௬
Qur'an Surah Ash-Shuraa Verse 46
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِيَاۤءَ يَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِيْلٍ ۗ (الشورى : ٤٢)
- wamā kāna
- وَمَا كَانَ
- And not will be
- இருக்க மாட்டார்கள்
- lahum
- لَهُم
- for them
- அவர்களுக்கு
- min awliyāa
- مِّنْ أَوْلِيَآءَ
- any protector
- பாதுகாவலர்கள் யாரும்
- yanṣurūnahum
- يَنصُرُونَهُم
- (who) will help them
- அவர்களுக்கு உதவுகின்ற(னர்)
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِۗ
- besides besides Allah
- அல்லாஹ்வையன்றி
- waman
- وَمَن
- And whom
- யாரை
- yuḍ'lili
- يُضْلِلِ
- Allah lets go astray
- வழிகெடுப்பானோ
- l-lahu
- ٱللَّهُ
- Allah lets go astray
- அல்லாஹ்
- famā lahu
- فَمَا لَهُۥ
- then not for him
- அவருக்கு இல்லை
- min sabīlin
- مِن سَبِيلٍ
- any way
- எந்த வழியும்
Transliteration:
Wa maa kaana lahum min awliyaaa'a yansuroonahum min doonil laah; wa mai yudlilil laahu famaa lahoo min sabeel(QS. aš-Šūrā:46)
English Sahih International:
And there will not be for them any allies to aid them other than Allah. And whoever Allah sends astray – for him there is no way. (QS. Ash-Shuraa, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு நண்பரும் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவர்களுக்கு(த் தப்ப) யாதொரு வழியுமில்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௬)
Jan Trust Foundation
(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறு வழியொன்றுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு உதவுகின்ற பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவ(ர் நேர்வழி பெற அவ)ருக்கு எந்த வழியும் இல்லை.