Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௪

Qur'an Surah Ash-Shuraa Verse 44

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِيٍّ مِّنْۢ بَعْدِهٖ ۗوَتَرَى الظّٰلِمِيْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ يَقُوْلُوْنَ هَلْ اِلٰى مَرَدٍّ مِّنْ سَبِيْلٍۚ (الشورى : ٤٢)

waman
وَمَن
And whoever
யாரை
yuḍ'lili
يُضْلِلِ
Allah lets go astray
வழிகெடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
Allah lets go astray
அல்லாஹ்
famā
فَمَا
then not
இல்லை
lahu
لَهُۥ
for him
அவனுக்கு
min waliyyin
مِن وَلِىٍّ
any protector
எந்தப் பாதுகாவலரும்
min baʿdihi
مِّنۢ بَعْدِهِۦۗ
after Him after Him
அவனுக்குப் பிறகு
watarā
وَتَرَى
And you will see
நீர் காண்பீர்!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
பாவிகளை
lammā ra-awū
لَمَّا رَأَوُا۟
when they see
அவர்கள் பார்க்கும் போது
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
வேதனையை
yaqūlūna
يَقُولُونَ
saying
அவர்கள் கூறுவார்கள்
hal ilā maraddin
هَلْ إِلَىٰ مَرَدٍّ
"Is (there) for return
திரும்புவதற்கு உண்டா?
min sabīlin
مِّن سَبِيلٍ
any way?"
ஏதேனும் வழி

Transliteration:

Wa mai yudlilil laahu famaa lahoo minw waliyyim mim ba'dih; wa taraz zaalimeena lammaa ra awul 'azaaba yaqooloona hal ilaa maraddim min sabeel (QS. aš-Šūrā:44)

English Sahih International:

And he whom Allah sends astray – for him there is no protector beyond Him. And you will see the wrongdoers, when they see the punishment, saying, "Is there for return [to the former world] any way?" (QS. Ash-Shuraa, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் "இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?" என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௪)

Jan Trust Foundation

“இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) எந்தப் பாதுகாவலரும் அவனுக்கு இல்லை. (நபியே!) நீர் (மறுமையில்) பாவிகளைக் காண்பீர்! அவர்கள் வேதனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று கூறுவார்கள்.