குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௪௦
Qur'an Surah Ash-Shuraa Verse 40
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَزٰۤؤُا سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۚفَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَى اللّٰهِ ۗاِنَّهٗ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ (الشورى : ٤٢)
- wajazāu
- وَجَزَٰٓؤُا۟
- (The) recompense
- தண்டனை
- sayyi-atin
- سَيِّئَةٍ
- (of) an evil
- தீமையின்
- sayyi-atun
- سَيِّئَةٌ
- (is) an evil
- தீமைதான்
- mith'luhā
- مِّثْلُهَاۖ
- like it
- அது போன்ற
- faman ʿafā
- فَمَنْ عَفَا
- But whoever pardons
- யார்/மன்னிப்பாரோ
- wa-aṣlaḥa
- وَأَصْلَحَ
- and makes reconciliation
- இன்னும் சமாதானம் செய்வாரோ
- fa-ajruhu
- فَأَجْرُهُۥ
- then his reward
- அவரது கூலி
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- (is) on Allah
- அல்லாஹ்வின் மீது
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- (does) not like
- நேசிக்க மாட்டான்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களை
Transliteration:
Wa jazaaa'u saiyi'atin saiyi'tum misluha faman 'afaa wa aslaha fa ajruhoo 'alal laah; innahoo laa yuhibbuz zaalimeen(QS. aš-Šūrā:40)
English Sahih International:
And the retribution for an evil act is an evil one like it, but whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah. Indeed, He does not like wrongdoers. (QS. Ash-Shuraa, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௪௦)
Jan Trust Foundation
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.