Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௮

Qur'an Surah Ash-Shuraa Verse 38

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَۖ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْۖ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۚ (الشورى : ٤٢)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
is'tajābū
ٱسْتَجَابُوا۟
respond
பதில் அளிப்பார்கள்
lirabbihim
لِرَبِّهِمْ
to their Lord
தங்கள் இறைவனுக்கு
wa-aqāmū
وَأَقَامُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
prayer
தொழுகையை
wa-amruhum
وَأَمْرُهُمْ
and their affairs
இன்னும் அவர்களது காரியம்
shūrā
شُورَىٰ
(are conducted by) consultation
ஆலோசிக்கப்படும்
baynahum
بَيْنَهُمْ
among them
அவர்களுக்கு மத்தியில்
wamimmā razaqnāhum
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
and from what We have provided them
இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து
yunfiqūna
يُنفِقُونَ
they spend
தர்மம் கொடுப்பார்கள்

Transliteration:

Wallazeenas tajaaboo li Rabbhim wa aqaamus Salaata wa amruhum shooraa bainahum wa mimmaa razaqnaahum yunfiqoon (QS. aš-Šūrā:38)

English Sahih International:

And those who have responded to their Lord and established prayer and whose affair is [determined by] consultation among themselves, and from what We have provided them, they spend, (QS. Ash-Shuraa, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

தவிர, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள். அவர் களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோச னைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவை களிலிருந்து தானமும் செய்வார்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௮)

Jan Trust Foundation

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளித்து (அவனை மட்டுமே வணங்கி, இணைவைத்தலை விட்டு விலகி) தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.