Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௭

Qur'an Surah Ash-Shuraa Verse 37

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰۤىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَ ۚ (الشورى : ٤٢)

wa-alladhīna yajtanibūna
وَٱلَّذِينَ يَجْتَنِبُونَ
And those who avoid
இன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள்
kabāira l-ith'mi
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
(the) greater sins
பெரும் பாவங்களை விட்டும்
wal-fawāḥisha
وَٱلْفَوَٰحِشَ
and the immoralities
மானக்கேடான விஷயங்களை விட்டும்
wa-idhā mā ghaḍibū hum
وَإِذَا مَا غَضِبُوا۟ هُمْ
and when and when they are angry they
அவர்கள் கோபப்படும்போது
yaghfirūna
يَغْفِرُونَ
forgive
மன்னித்து விடுவார்கள்

Transliteration:

Wallazeena yajtaniboona kabaaa'iral ismi wal fawaa hisha wa izaa maa ghadiboo hum yaghfiroon (QS. aš-Šūrā:37)

English Sahih International:

And those who avoid the major sins and immoralities, and when they are angry, they forgive, (QS. Ash-Shuraa, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் பெரும் பாவங்களை விட்டும், மானக்கேடான விஷயங்களை விட்டும் விலகி விடுவார்கள். அவர்கள் கோபப்படும் போது மன்னித்து விடுவார்கள்.