Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௩௩

Qur'an Surah Ash-Shuraa Verse 33

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ يَّشَأْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ (الشورى : ٤٢)

in yasha
إِن يَشَأْ
If He wills
அவன் நாடினால்
yus'kini
يُسْكِنِ
He can cause the wind to become still
அமைதியாக்கி விடுவான்
l-rīḥa
ٱلرِّيحَ
He can cause the wind to become still
காற்றுகளை
fayaẓlalna
فَيَظْلَلْنَ
then they would remain
ஆகிவிடும்
rawākida
رَوَاكِدَ
motionless
அசையாமல் நிற்கக்கூடியதாக
ʿalā ẓahrihi
عَلَىٰ ظَهْرِهِۦٓۚ
on its back
அதன் மீதே
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கின்றன
laāyātin
لَءَايَٰتٍ
surely (are) Signs
பல அத்தாட்சிகள்
likulli
لِّكُلِّ
for everyone
எல்லோருக்கும்
ṣabbārin
صَبَّارٍ
patient
பெரும் பொறுமையாளர்கள்
shakūrin
شَكُورٍ
(and) grateful
நன்றி உள்ளவர்கள்

Transliteration:

Iny yashaaa yuskinir reeha fa yazlalna rawaakida 'alaa zahirh; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor (QS. aš-Šūrā:33)

English Sahih International:

If He willed, He could still the wind, and they would remain motionless on its surface. Indeed in that are signs for everyone patient and grateful. (QS. Ash-Shuraa, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய கஷ்டங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளிருக்கின்றன. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் நாடினால் காற்றுகளை அமைதியாக்கி விடுவான். அவை (-அந்த கப்பல்கள் முன்னேறிச் செல்லாமல்) அதன் மீதே (-அந்த தண்ணீரின் மீதே) அசையாமல் நிற்கக்கூடியதாக ஆகிவிடும். பெரும் பொறுமையாளர்கள், நன்றி உள்ளவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.