Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௮

Qur'an Surah Ash-Shuraa Verse 28

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ۗوَهُوَ الْوَلِيُّ الْحَمِيْدُ (الشورى : ٤٢)

wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எப்படிப்பட்டவன்
yunazzilu
يُنَزِّلُ
sends down
இறக்குகின்றான்
l-ghaytha
ٱلْغَيْثَ
the rain
மழையை
min baʿdi mā qanaṭū
مِنۢ بَعْدِ مَا قَنَطُوا۟
after after [what] they have despaired
அவர்கள் நிராசை அடைந்த பின்னர்
wayanshuru
وَيَنشُرُ
and spreads
இன்னும் பரப்புகின்றான்
raḥmatahu
رَحْمَتَهُۥۚ
His mercy
தனது அருளை
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-waliyu
ٱلْوَلِىُّ
(is) the Protector
பாதுகாவலன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
the Praiseworthy
மகா புகழாளன்

Transliteration:

Wa Huwal lazee yunazzilul ghaisa mim ba'di maa qanatoo wa yanshuru rahmatah; wa Huwal Waliyyul Hameed (QS. aš-Šūrā:28)

English Sahih International:

And it is He who sends down the rain after they had despaired and spreads His mercy. And He is the Protector, the Praiseworthy. (QS. Ash-Shuraa, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன்னுடைய அருளை பொழிகின்றான். அவனே பாதுகாவலன்; புகழுக்குரியவன். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மழை வராது என்று) அவர்கள் நிராசை அடைந்த பின்னர் அவன்தான் மழையை இறக்குகின்றான். தனது அருளை (பூமியில்) பரப்புகின்றான். அவன்தான் (உண்மையான) பாதுகாவலன், மகா புகழாளன்.