குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௭
Qur'an Surah Ash-Shuraa Verse 27
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِى الْاَرْضِ وَلٰكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَاۤءُ ۗاِنَّهٗ بِعِبَادِهٖ خَبِيْرٌۢ بَصِيْرٌ (الشورى : ٤٢)
- walaw basaṭa
- وَلَوْ بَسَطَ
- And if Allah extends
- விசாலமாக்கினால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah extends
- அல்லாஹ்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- the provision
- வாழ்வாதாரத்தை
- liʿibādihi
- لِعِبَادِهِۦ
- for His slaves
- தனது அடியார்களுக்கு
- labaghaw
- لَبَغَوْا۟
- surely they would rebel
- அவர்கள் எல்லை மீறி விடுவார்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walākin
- وَلَٰكِن
- but
- என்றாலும்
- yunazzilu
- يُنَزِّلُ
- He sends down
- இறக்குகின்றான்
- biqadarin
- بِقَدَرٍ
- in (due) measure
- அளவுடன்
- mā yashāu
- مَّا يَشَآءُۚ
- what He wills
- தான் நாடியதை
- innahu
- إِنَّهُۥ
- Indeed, He
- நிச்சயமாக அவன்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- of His slaves
- தன் அடியார்களை
- khabīrun
- خَبِيرٌۢ
- (is) All-Aware
- ஆழ்ந்தறிபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Wa law basatal laahur rizqa li'ibaadihee labaghaw fil ardi wa laakiny yunazzilu biqadarim maa yashaaa'; innahoo bi'ibaadihee Khabeerum Baseer(QS. aš-Šūrā:27)
English Sahih International:
And if Allah had extended [excessively] provision for His servants, they would have committed tyranny throughout the earth. But He sends [it] down in an amount which He wills. Indeed He is, of His servants, Aware and Seeing. (QS. Ash-Shuraa, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் தன் அடியார்களுக்கு (கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகின்றான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௭)
Jan Trust Foundation
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்கினால் அவர்கள் பூமியில் எல்லை மீறி விடுவார்கள். என்றாலும் தான் நாடியதை (நாடிய) அளவுடன் இறக்குகின்றான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.