குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௬
Qur'an Surah Ash-Shuraa Verse 26
ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَسْتَجِيْبُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۗوَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ (الشورى : ٤٢)
- wayastajību
- وَيَسْتَجِيبُ
- And He answers
- இன்னும் பதில் அளிக்கின்றான்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and do
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous deeds
- நன்மைகளை
- wayazīduhum
- وَيَزِيدُهُم
- and increases (for) them
- இன்னும் அதிகம் கொடுப்பான் அவர்களுக்கு
- min faḍlihi
- مِّن فَضْلِهِۦۚ
- from His Bounty
- தனது அருளால்
- wal-kāfirūna
- وَٱلْكَٰفِرُونَ
- And the disbelievers -
- நிராகரிப்பாளர்கள்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- (will be) a punishment
- வேதனை
- shadīdun
- شَدِيدٌ
- severe
- கடுமையான(து)
Transliteration:
Wa yastajeebul lazeena aamanoo wa 'amilu saalihaati wa yazeeduhum min fadlih; wal kaafiroona lahum 'azaabun shadeed(QS. aš-Šūrā:26)
English Sahih International:
And He answers [the supplication of] those who have believed and done righteous deeds and increases [for] them from His bounty. But the disbelievers will have a severe punishment. (QS. Ash-Shuraa, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
அன்றி, நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன்னுடைய அருளைப் பின்னும் (பின்னும்) அதிகப்படுத்துகின்றான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௬)
Jan Trust Foundation
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்கு கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கின்றான் (அந்த துஆக்களை அங்கீகரிக்கின்றான்). இன்னும், தனது அருளால் அவர்களுக்கு அதிகம் கொடுப்பான். நிராகரிப்பாளர்கள் - அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.