Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௫

Qur'an Surah Ash-Shuraa Verse 25

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَۙ (الشورى : ٤٢)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
And He (is) the One Who
அவன்/ எப்படிப்பட்டவன்
yaqbalu
يَقْبَلُ
accepts
ஏற்றுக்கொள்கிறான்
l-tawbata
ٱلتَّوْبَةَ
the repentance
திருந்துவதை
ʿan ʿibādihi
عَنْ عِبَادِهِۦ
of His slaves
தனது அடியார்களிடமிருந்து
wayaʿfū
وَيَعْفُوا۟
and pardons
இன்னும் மன்னிக்கிறான்
ʿani l-sayiāti
عَنِ ٱلسَّيِّـَٔاتِ
[of] the evil
பாவங்களை
wayaʿlamu
وَيَعْلَمُ
and He knows
இன்னும் நன்கறிகின்றான்
mā tafʿalūna
مَا تَفْعَلُونَ
what you do
நீங்கள் செய்வதை

Transliteration:

Wa Huwal lazee yaqbalut tawbata 'an 'ibaadihee wa ya'foo 'anis saiyiaati wa ya'lamu maa taf'aloon (QS. aš-Šūrā:25)

English Sahih International:

And it is He who accepts repentance from His servants and pardons misdeeds, and He knows what you do. (QS. Ash-Shuraa, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்து(க் குற்றங்களையும்) மன்னித்து விடுகின்றான். நீங்கள் செய்பவைகளையும் அவன் நன்கறிகின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்துவதை ஏற்றுக் கொள்கிறான்; (திருந்தியவர்களின்) பாவங்களை அவன் மன்னிக்கிறான்; நீங்கள் செய்வதை அவன் நன்கறிகின்றான்.