Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௨

Qur'an Surah Ash-Shuraa Verse 22

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَرَى الظّٰلِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ ۗوَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِيْ رَوْضٰتِ الْجَنّٰتِۚ لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۗذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ (الشورى : ٤٢)

tarā
تَرَى
You will see
நீர் பார்ப்பீர்!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்காரர்களை
mush'fiqīna
مُشْفِقِينَ
fearful
பயந்தவர்களாக
mimmā kasabū
مِمَّا كَسَبُوا۟
of what they earned
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
wahuwa wāqiʿun
وَهُوَ وَاقِعٌۢ
and it (will) befall
அது நிகழ்ந்தே தீரும்
bihim
بِهِمْۗ
[on] them
அவர்களுக்கு
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and do
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
fī rawḍāti
فِى رَوْضَاتِ
(will be) in flowering meadows
சோலைகளில்
l-janāti
ٱلْجَنَّاتِۖ
(of) the Gardens
சொர்க்கங்களின்
lahum
لَهُم
for them
அவர்களுக்கு உண்டு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
(is) whatever they wish
அவர்கள் நாடுகின்றவை
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْۚ
with their Lord
அவர்களின் இறைவனிடம்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
That - it
இதுதான்
l-faḍlu
ٱلْفَضْلُ
(is) the Bounty
சிறப்பாகும்
l-kabīru
ٱلْكَبِيرُ
the Great
மிகப் பெரிய

Transliteration:

Taraz zaalimeena mushfiqeena mimmaa kasaboo wa huwa waaqi'um bihim; wallazeena aamanoo wa 'amilus saalihaati fee rawdaatil jannaati lahum maa yashaaa'oona 'inda Rabbihim; zaalika huwal fadlul kabeer (QS. aš-Šūrā:22)

English Sahih International:

You will see the wrongdoers fearful of what they have earned, and it will [certainly] befall them. And those who have believed and done righteous deeds will be in lush regions of the gardens [in Paradise] having whatever they will in the presence of their Lord. That is what is the great bounty. (QS. Ash-Shuraa, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீங்கள் காண்பீர்கள். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள், சுவனபதிகளில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௨)

Jan Trust Foundation

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அநியாயக்காரர்களை அவர்கள் செய்தவற்றின் (-பாவங்களின்) காரணமாக (மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையை) பயந்தவர்களாக நீர் பார்ப்பீர்! அது (-தண்டனை) அவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களின் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடுகின்றவை (எல்லாம்) அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. இதுதான் மிகப் பெரிய சிறப்பாகும்.