Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௨௦

Qur'an Surah Ash-Shuraa Verse 20

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِيْ حَرْثِهٖۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَاۙ وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ (الشورى : ٤٢)

man
مَن
Whoever
யார்
kāna
كَانَ
is
இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
desiring
நாடுகின்றவராக
ḥartha
حَرْثَ
(the) harvest
விளைச்சலை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter -
மறுமையின்
nazid
نَزِدْ
We increase
நாம் அதிகப்படுத்துவோம்
lahu
لَهُۥ
for him
அவருக்கு
fī ḥarthihi
فِى حَرْثِهِۦۖ
in his harvest
அவருடைய விளைச்சலில்
waman kāna
وَمَن كَانَ
And whoever is
இன்னும் யார்/இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
desiring
நாடுகின்றவராக
ḥartha
حَرْثَ
(the) harvest
விளைச்சலை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலகத்தின்
nu'tihi
نُؤْتِهِۦ
We give him
அவருக்கு நாம் கொடுப்போம்
min'hā
مِنْهَا
of it
அதில் இருந்து
wamā lahu
وَمَا لَهُۥ
but not for him
இல்லை/அவருக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையில்
min naṣībin
مِن نَّصِيبٍ
any share
எவ்வித பங்கும்

Transliteration:

Man kaana yureedu harsal Aakhirati nazid lahoo fee harsihee wa man kaana yureedu harsad dunyaa nu'tihee mnhaa wa maa lahoo fil Aakhirati min naseeb (QS. aš-Šūrā:20)

English Sahih International:

Whoever desires the harvest of the Hereafter – We increase for him in his harvest [i.e., reward]. And whoever desires the harvest [i.e., benefits] of this world – We give him thereof, but there is not for him in the Hereafter any share. (QS. Ash-Shuraa, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் மறுமையின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். யார் உலகத்தின் விளைச்சலை நாடுகின்றவராக இருப்பாரோ அவருக்கு அதில் இருந்து (-உலக ஆதாயத்தில் இருந்து) நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையில் இருந்து) எவ்வித பங்கும் இல்லை.