Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௯

Qur'an Surah Ash-Shuraa Verse 19

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ ۚوَهُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ ࣖ (الشورى : ٤٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
laṭīfun
لَطِيفٌۢ
(is) Subtle
மிக கருணையும் தயவும் உடையவன்
biʿibādihi
بِعِبَادِهِۦ
with His slaves;
தன் அடியார்கள் மீது
yarzuqu
يَرْزُقُ
He gives provision
உணவளிக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
(to) whom He wills
தான் நாடுகின்றவர்களுக்கு
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-qawiyu
ٱلْقَوِىُّ
(is) the All-Strong
மிக வலிமை உள்ளவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்

Transliteration:

Allahu lateefum bi'ibaadihee yarzuqu mai yashaaa'u wa Huwal Qawiyyul 'Azeez (QS. aš-Šūrā:19)

English Sahih International:

Allah is Subtle with His servants; He gives provision to whom He wills. And He is the Powerful, the Exalted in Might. (QS. Ash-Shuraa, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் தன் அடியார்கள் மீது மிக கருணையும் தயவும் உடையவன். அவன் தான் நாடுகின்றவர்களுக்கு உணவளிக்கின்றான். அவன்தான் மிக வலிமை உள்ளவன், (யாவரையும்) மிகைத்தவன்.