Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௮

Qur'an Surah Ash-Shuraa Verse 18

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْتَعْجِلُ بِهَا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَاۚ وَالَّذِيْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَاۙ وَيَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ۗ اَلَآ اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ فِى السَّاعَةِ لَفِيْ ضَلٰلٍۢ بَعِيْدٍ (الشورى : ٤٢)

yastaʿjilu bihā
يَسْتَعْجِلُ بِهَا
Seek to hasten [of] it
அவசரமாகத் தேடுகின்றனர்/அதை
alladhīna lā yu'minūna bihā
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَاۖ
those who (do) not believe in it
நம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதை
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
and those who believe
நம்பிக்கை கொண்டவர்கள்
mush'fiqūna
مُشْفِقُونَ
(are) fearful
பயப்படுகின்றனர்
min'hā
مِنْهَا
of it
அதை
wayaʿlamūna
وَيَعْلَمُونَ
and know
இன்னும் அறிவார்கள்
annahā
أَنَّهَا
that it
நிச்சயமாக அது
l-ḥaqu
ٱلْحَقُّۗ
(is) the truth
உண்மைதான்
alā
أَلَآ
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
inna alladhīna yumārūna
إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ
indeed those who dispute
நிச்சயமாக தர்க்கிப்பவர்கள்
fī l-sāʿati
فِى ٱلسَّاعَةِ
concerning the Hour
மறுமை விஷயத்தில்
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍۭ
(are) certainly in error
வழிகேட்டில்தான்
baʿīdin
بَعِيدٍ
far
வெகு தூரமான

Transliteration:

Yasta'jilu bihal lazeena laa yu'minoona bihaa wallazeena aamanoo mushfiqoona minhaa wa ya'lamoona annahal haqq; alaaa innal lazeena yumaaroona fis Saa'ati lafee dalaalim ba'eed (QS. aš-Šūrā:18)

English Sahih International:

Those who do not believe in it are impatient for it, but those who believe are fearful of it and know that it is the truth. Unquestionably, those who dispute concerning the Hour are in extreme error. (QS. Ash-Shuraa, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

மறுமையை நம்பாதவர்கள் அதனைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதனை நம்பியிருக்கின்றார்களோ அவர்கள் அதனைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கின் றார்கள் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க| அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகின்றனர். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகின்றனர். நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.