Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௭

Qur'an Surah Ash-Shuraa Verse 17

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ الَّذِيْٓ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ ۗوَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ (الشورى : ٤٢)

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِىٓ
Allah (is) the One Who
அல்லாஹ்/ எப்படிப்பட்டவன்
anzala
أَنزَلَ
(has) sent down
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
சத்தியத்துடன்
wal-mīzāna
وَٱلْمِيزَانَۗ
and the Balance
தராசையும்
wamā yud'rīka
وَمَا يُدْرِيكَ
And what will make you know?
உமக்கு எது அறிவிக்கும்?
laʿalla l-sāʿata
لَعَلَّ ٱلسَّاعَةَ
Perhaps the Hour
மறுமை
qarībun
قَرِيبٌ
(is) near
மிக சமீபமானது

Transliteration:

Allahul lazeee anzalal Kitaaba bilhaqqi wal Meezaan; wa ma yudreeka la'allas Saa'ata qareeb (QS. aš-Šūrā:17)

English Sahih International:

It is Allah who has sent down the Book in truth and [also] the balance [i.e., justice]. And what will make you perceive? Perhaps the Hour is near. (QS. Ash-Shuraa, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடியஇவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீங்கள் அறிவீர்களா! (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்(தான்) சத்தியத்துடன் (இந்த) வேதத்தையும் தராசையும் (நீதத்தையும்) இறக்கினான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு எது அறிவிக்கும்? (அல்லாஹ்வைத் தவிர யார் ஒருவரும் உமக்கு மறுமையைப் பற்றி அறிவிக்க முடியாது.)