Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௫

Qur'an Surah Ash-Shuraa Verse 15

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلِذٰلِكَ فَادْعُ ۚوَاسْتَقِمْ كَمَآ اُمِرْتَۚ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْۚ وَقُلْ اٰمَنْتُ بِمَآ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمْ ۗ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۗ لَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۗ لَاحُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ ۗ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا ۚوَاِلَيْهِ الْمَصِيْرُ ۗ (الشورى : ٤٢)

falidhālika
فَلِذَٰلِكَ
So to that
இதன் பக்கமே
fa-ud'ʿu
فَٱدْعُۖ
then invite
நீர் அழைப்பீராக
wa-is'taqim
وَٱسْتَقِمْ
and stand firm
இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக
kamā umir'ta
كَمَآ أُمِرْتَۖ
as you are commanded
நீர் கட்டளையிடப்பட்டது போன்றே
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
and (do) not follow
நீர் பின்பற்றாதீர்
ahwāahum
أَهْوَآءَهُمْۖ
their desires
மன விருப்பங்களை அவர்களின்
waqul
وَقُلْ
but say
இன்னும் நீர் கூறுவிராக
āmantu
ءَامَنتُ
"I believe
நான் நம்பிக்கை கொண்டேன்
bimā anzala
بِمَآ أَنزَلَ
in what Allah has sent down
இறக்கியதை
l-lahu
ٱللَّهُ
Allah has sent down
அல்லாஹ்
min kitābin
مِن كِتَٰبٍۖ
of (the) Book
வேதங்களில் இருந்து
wa-umir'tu
وَأُمِرْتُ
and I am commanded
பணிக்கப்பட்டுள்ளேன்
li-aʿdila
لِأَعْدِلَ
that I do justice
நீதமாக நடக்க வேண்டும் என்று
baynakumu
بَيْنَكُمُۖ
between you
உங்களுக்கு மத்தியில்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
rabbunā
رَبُّنَا
(is) our Lord
இன்னும் உங்களுக்கு
warabbukum
وَرَبُّكُمْۖ
and your Lord
இன்னும் உங்கள் அமல்கள்
lanā
لَنَآ
For us
எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
our deeds
எங்கள் அமல்கள்
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْۖ
your deeds
உங்கள் அமல்கள்
lā ḥujjata
لَا حُجَّةَ
(There is) no argument
சண்டை வேண்டாம்
baynanā
بَيْنَنَا
between us
நமக்கு மத்தியிலும்
wabaynakumu
وَبَيْنَكُمُۖ
and between you
உங்களுக்கு மத்தியிலும்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்தான்
yajmaʿu
يَجْمَعُ
will assemble
ஒன்று சேர்ப்பான்
baynanā
بَيْنَنَاۖ
[between] us
நமக்கு மத்தியில்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the final return"
மீளுமிடம்

Transliteration:

Falizaalika fad'u wastaqim kamaaa umirta wa laa tattabi' ahwaaa'ahum wa qul aamantu bimaaa anzalal laahu min Kitaab, wa umirtu li a'dila bainakum Allaahu Rabbunaa wa Rabbukum lanaaa a'maa lunaa wa lakum a'maalukim laa hujjata bainanaa wa baina kumul laahu yajma'u bainanaa wa ilaihil maseer (QS. aš-Šūrā:15)

English Sahih International:

So to that [religion of Allah] invite, [O Muhammad], and remain on a right course as you are commanded and do not follow their inclinations but say, "I have believed in what Allah has revealed of scripture [i.e., the Quran], and I have been commanded to do justice among you. Allah is our Lord and your Lord. For us are our deeds, and for you your deeds. There is no [need for] argument between us and you. Allah will bring us together, and to Him is the [final] destination." (QS. Ash-Shuraa, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி) னளவில் (அவர்களை) நீங்கள் அழையுங்கள். உங்களுக்கு ஏவப்பட்டபடி நீங்கள் உறுதியாக இருங்கள். அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். பின்னும் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: அல்லாஹ் வேதமென்று எதனை இறக்கி வைத்தானோ அதனையே நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ் தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயலுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயலுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் யாதொரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதன் பக்கமே (உமக்கும் நூஹுக்கும் மற்ற நபிமார்களுக்கும் நாம் எதை மார்க்கமாக அமைத்தோமோ அந்த மார்க்கத்தின் பக்கமே) நீர் அழைப்பீராக! நீர் கட்டளையிடப்பட்டது போன்றே (உமக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில்) நீர் நிலையாக நீடித்து இருப்பீராக! அவர்களின் (-இந்த சத்திய மார்க்கத்தில் சந்தேகித்தவர்களின்) மனவிருப்பங்களை நீர் பின்பற்றாதீர்! இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் இறக்கிய வேதங்களை நான் நம்பிக்கை கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும் என்று நான் பணிக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவன், இன்னும் உங்கள் இறைவன் ஆவான். எங்களுக்கு எங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). நமக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் சண்டை வேண்டாம். அல்லாஹ்தான் (நம்மை) ஒன்று சேர்(த்து நமக்கு மத்தியில் தீர்ப்பளி)ப்பான். அவன் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.