Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௨

Qur'an Surah Ash-Shuraa Verse 12

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۚاِنَّهٗ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (الشورى : ٤٢)

lahu
لَهُۥ
To Him (belongs)
அவனுக்கே உரியன
maqālīdu
مَقَالِيدُ
(the) keys
சாவிகள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth
இன்னும் பூமி
yabsuṭu
يَبْسُطُ
He extends
விரிவாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
the provision
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
for whom He wills
தான் நாடியவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُۚ
and restricts
இன்னும் சுருக்குகின்றான்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன் ஆவான்

Transliteration:

Lahoo maqaaleedus samaawaati wal ardi yabsutur rizqa limany yashaaa'u wa yaqdir; innahoo bikulli shai'unw wa Huwas Samee'ul Baseer (QS. aš-Šūrā:12)

English Sahih International:

To Him belong the keys of the heavens and the earth. He extends provision for whom He wills and restricts [it]. Indeed He is, of all things, Knowing. (QS. Ash-Shuraa, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கின்றான்.) (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகின்றான்; (தான் நாடியவர்களுக்கு) சுருக்குகின்றான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.