Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௧

Qur'an Surah Ash-Shuraa Verse 11

ஸூரத்துஷ் ஷூறா [௪௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًاۚ يَذْرَؤُكُمْ فِيْهِۗ لَيْسَ كَمِثْلِهٖ شَيْءٌ ۚوَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ (الشورى : ٤٢)

fāṭiru
فَاطِرُ
(The) Creator
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களையும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
பூமியையும்
jaʿala
جَعَلَ
He made
ஏற்படுத்தினான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْ
from yourselves
உங்களிலிருந்தே
azwājan
أَزْوَٰجًا
mates
ஜோடிகளை(யும்)
wamina l-anʿāmi
وَمِنَ ٱلْأَنْعَٰمِ
and among the cattle
இன்னும் கால்நடைகளில்
azwājan
أَزْوَٰجًاۖ
mates;
ஜோடிகளை(யும்)
yadhra-ukum
يَذْرَؤُكُمْ
He multiplies you
படைக்கின்றான் உங்களை
fīhi laysa
فِيهِۚ لَيْسَ
thereby (There) is not
அதில்/இல்லை
kamith'lihi
كَمِثْلِهِۦ
like Him
அவனைப் போன்று
shayon wahuwa
شَىْءٌۖ وَهُوَ
anything and He
எதுவும்/அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) the All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-baṣīru
ٱلْبَصِيرُ
the All-Seer
நன்கு பார்ப்பவன்

Transliteration:

Faatirus samaawaati wal ard; ja'ala lakum min anfusikum azwaajanw wa minal an'aami azwaajany yazra'ukum feeh; laisa kamislihee shai'unw wa Huwas Samee'ul Baseer (QS. aš-Šūrā:11)

English Sahih International:

[He is] Creator of the heavens and the earth. He has made for you from yourselves, mates, and among the cattle, mates; He multiplies you thereby. There is nothing like unto Him, and He is the Hearing, the Seeing. (QS. Ash-Shuraa, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ் ஷூறா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களையும் பூமியையும் படைத்தவன் உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும் கால்நடைகளில் (உங்களுக்காக) ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். அதில் (-இப்படி ஜோடியாக ஏற்படுத்தியதில்) அவன் உங்களைப் படை(த்து வாழவை)க்கின்றான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு பார்ப்பவன்.