Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Page: 5

Ash-Shuraa

(aš-Šūrā)

௪௧

وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰۤىِٕكَ مَا عَلَيْهِمْ مِّنْ سَبِيْلٍۗ ٤١

walamani
وَلَمَنِ
யார்
intaṣara
ٱنتَصَرَ
பழிவாங்குவாரோ
baʿda ẓul'mihi
بَعْدَ ظُلْمِهِۦ
தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
fa-ulāika mā ʿalayhim
فَأُو۟لَٰٓئِكَ مَا عَلَيْهِم
அவர்கள் மீது இல்லை
min sabīlin
مِّن سَبِيلٍ
எவ்வித குற்றமும்
எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அநியாயத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால், அதனால் அவர் மீது யாதொரு குற்றமுமில்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௧)
Tafseer
௪௨

اِنَّمَا السَّبِيْلُ عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَ النَّاسَ وَيَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّۗ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٤٢

innamā l-sabīlu
إِنَّمَا ٱلسَّبِيلُ
குற்றமெல்லாம்
ʿalā alladhīna yaẓlimūna
عَلَى ٱلَّذِينَ يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்கள் மீதும்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களுக்கு
wayabghūna
وَيَبْغُونَ
இன்னும் வரம்பு மீறுகிறார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّۚ
அநியாயமாக
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
வலிதரக்கூடியது
குற்றமெல்லாம் அளவு மீறி மனிதர்கள் மீது அநியாயம் செய்து, நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்பவர்கள் மீதுதான். இத்தகையவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௨)
Tafseer
௪௩

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ࣖ ٤٣

walaman ṣabara
وَلَمَن صَبَرَ
யார் பொறுமையாக இருப்பாரோ
waghafara
وَغَفَرَ
இன்னும் மன்னிப்பாரோ
inna dhālika
إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக அது
lamin ʿazmi l-umūri
لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ
மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்
எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக்கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக இது வீரமிக்க செயலாகும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௩)
Tafseer
௪௪

وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِيٍّ مِّنْۢ بَعْدِهٖ ۗوَتَرَى الظّٰلِمِيْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ يَقُوْلُوْنَ هَلْ اِلٰى مَرَدٍّ مِّنْ سَبِيْلٍۚ ٤٤

waman
وَمَن
யாரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுத்தானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā
فَمَا
இல்லை
lahu
لَهُۥ
அவனுக்கு
min waliyyin
مِن وَلِىٍّ
எந்தப் பாதுகாவலரும்
min baʿdihi
مِّنۢ بَعْدِهِۦۗ
அவனுக்குப் பிறகு
watarā
وَتَرَى
நீர் காண்பீர்!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
பாவிகளை
lammā ra-awū
لَمَّا رَأَوُا۟
அவர்கள் பார்க்கும் போது
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
yaqūlūna
يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
hal ilā maraddin
هَلْ إِلَىٰ مَرَدٍّ
திரும்புவதற்கு உண்டா?
min sabīlin
مِّن سَبِيلٍ
ஏதேனும் வழி
எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் "இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?" என்று அவர்கள் கூறுவதை நீங்கள் காண்பீர்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௪)
Tafseer
௪௫

وَتَرٰىهُمْ يُعْرَضُوْنَ عَلَيْهَا خٰشِعِيْنَ مِنَ الذُّلِّ يَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِيٍّۗ وَقَالَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ اَلَآ اِنَّ الظّٰلِمِيْنَ فِيْ عَذَابٍ مُّقِيْمٍ ٤٥

watarāhum
وَتَرَىٰهُمْ
நீர் காண்பீர்/அவர்களை
yuʿ'raḍūna
يُعْرَضُونَ
சமர்ப்பிக்கப்படுவர்களாக
ʿalayhā
عَلَيْهَا
அதன் முன்
khāshiʿīna
خَٰشِعِينَ
தலைகுனிந்தவர்களாக
mina l-dhuli
مِنَ ٱلذُّلِّ
இழிவினால்
yanẓurūna
يَنظُرُونَ
அவர்கள் பார்ப்பார்கள்
min ṭarfin
مِن طَرْفٍ
பார்வையால்
khafiyyin
خَفِىٍّۗ
திருட்டு
waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-khāsirīna
ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகள்
alladhīna khasirū
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்தான்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கு(ம்)
wa-ahlīhim
وَأَهْلِيهِمْ
தங்கள்குடும்பத்திற்கும்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
fī ʿadhābin
فِى عَذَابٍ
வேதனையில்
muqīmin
مُّقِيمٍ
நிலையான
அன்றி, சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக்கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள். அன்றி, நம்பிக்கை கொண்டவர் (அவர்களை நோக்கி) "எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக்கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தாம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௫)
Tafseer
௪௬

وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِيَاۤءَ يَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِيْلٍ ۗ ٤٦

wamā kāna
وَمَا كَانَ
இருக்க மாட்டார்கள்
lahum
لَهُم
அவர்களுக்கு
min awliyāa
مِّنْ أَوْلِيَآءَ
பாதுகாவலர்கள் யாரும்
yanṣurūnahum
يَنصُرُونَهُم
அவர்களுக்கு உதவுகின்ற(னர்)
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِۗ
அல்லாஹ்வையன்றி
waman
وَمَن
யாரை
yuḍ'lili
يُضْلِلِ
வழிகெடுப்பானோ
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
famā lahu
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
min sabīlin
مِن سَبِيلٍ
எந்த வழியும்
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு நண்பரும் (அந்நாளில்) அவர்களுக்கு இருக்கமாட்டார். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவர்களுக்கு(த் தப்ப) யாதொரு வழியுமில்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௬)
Tafseer
௪௭

اِسْتَجِيْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ ۗمَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ يَّوْمَىِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِيْرٍ ٤٧

is'tajībū
ٱسْتَجِيبُوا۟
நீங்கள்பதில் அளியுங்கள்!
lirabbikum
لِرَبِّكُم
உங்கள் இறைவனுக்கு
min qabli
مِّن قَبْلِ
முன்
an yatiya
أَن يَأْتِىَ
வருவதற்கு
yawmun
يَوْمٌ
ஒரு நாள்
lā maradda
لَّا مَرَدَّ
அறவே தடுத்துவிட முடியாது
lahu
لَهُۥ
அதை
mina l-lahi
مِنَ ٱللَّهِۚ
அல்லாஹ்விடமிருந்து
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு இருக்காது
min malja-in
مِّن مَّلْجَإٍ
ஒதுங்குமிடம் எதுவும்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
wamā lakum
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார்
min nakīrin
مِّن نَّكِيرٍ
தடுப்பவர் யாரும்
அல்லாஹ்விடமிருந்து தட்டிக்கழிக்க முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். அந்நாளில் உங்களுக்குத் தப்புமிடம் கிடைக்காது. (உங்கள் குற்றத்தை) நீங்கள் மறுக்கவும் முடியாது. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௭)
Tafseer
௪௮

فَاِنْ اَعْرَضُوْا فَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ۗاِنْ عَلَيْكَ اِلَّا الْبَلٰغُ ۗوَاِنَّآ اِذَآ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚوَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ ٤٨

fa-in aʿraḍū
فَإِنْ أَعْرَضُوا۟
அவர்கள் புறக்கணித்தால்
famā arsalnāka
فَمَآ أَرْسَلْنَٰكَ
நாம் உம்மை அனுப்பவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًاۖ
கண்காணிப்பவராக
in ʿalayka
إِنْ عَلَيْكَ
உம்மீது கடமை இல்லை
illā
إِلَّا
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُۗ
எடுத்துரைப்பதை
wa-innā
وَإِنَّآ
நிச்சயமாக நாம்
idhā adhaqnā
إِذَآ أَذَقْنَا
சுவைக்க வைத்தால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதர்களுக்கு
minnā
مِنَّا
நம்மிடமிருந்து
raḥmatan
رَحْمَةً
ஓர் அருளை
fariḥa
فَرِحَ
அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்)
bihā
بِهَاۖ
அதனால்
wa-in tuṣib'hum
وَإِن تُصِبْهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டால்
sayyi-atun
سَيِّئَةٌۢ
ஒரு தீங்கு
bimā qaddamat
بِمَا قَدَّمَتْ
முற்படுத்தியதால்
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
fa-inna l-insāna
فَإِنَّ ٱلْإِنسَٰنَ
நிச்சயமாக மனிதன்
kafūrun
كَفُورٌ
மிகப்பெரிய நிராகரிப்பாளன்
(நபியே! இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும்) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்துவிட்டால், (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனென்றால்,) அவர்களைப் பாதுகாப்பவராக நாம் உங்களை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உங்கள்மீது கடமை அல்ல. நம்முடைய அருளை மனிதன் சுவைக்கும்படி செய்தால், அதைப்பற்றி அவன் சந்தோஷப்படுகின்றான். அவனுடைய கரங்களே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவனுக்கு யாதேனுமொரு தீங்கு ஏற்படும் பட்சத்தில், நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாகி (இறைவனையே நிராகரிக்கவும் தலைப்பட்டு) விடுகின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௮)
Tafseer
௪௯

لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يَخْلُقُ مَا يَشَاۤءُ ۗيَهَبُ لِمَنْ يَّشَاۤءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَاۤءُ الذُّكُوْرَ ۙ ٤٩

lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கே
mul'ku
مُلْكُ
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமி(யின்)
yakhluqu
يَخْلُقُ
படைக்கின்றான்
mā yashāu
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
yahabu
يَهَبُ
வழங்குகின்றான்
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
ināthan
إِنَٰثًا
பெண் பிள்ளைகளை
wayahabu
وَيَهَبُ
இன்னும் வழங்குகின்றான்
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
l-dhukūra
ٱلذُّكُورَ
ஆண் பிள்ளைகளை
வானம், பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே. இவற்றைத் தவிர, அவன் விரும்பியதையும் படைக்கின்றான். ஆகவே, அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪௯)
Tafseer
௫௦

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚوَيَجْعَلُ مَنْ يَّشَاۤءُ عَقِيْمًا ۗاِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ ٥٠

aw
أَوْ
அல்லது
yuzawwijuhum
يُزَوِّجُهُمْ
அவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான்
dhuk'rānan
ذُكْرَانًا
ஆண் பிள்ளைகளை
wa-ināthan
وَإِنَٰثًاۖ
இன்னும் பெண் பிள்ளைகளை
wayajʿalu
وَيَجْعَلُ
இன்னும் ஆக்குகின்றான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
ʿaqīman
عَقِيمًاۚ
மலடுகளாக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி, அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் (அவரவர்களின் தகுதியை) நன்கறிந்தவனும், (தான் விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௫௦)
Tafseer