Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Page: 3

Ash-Shuraa

(aš-Šūrā)

௨௧

اَمْ لَهُمْ شُرَكٰۤؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَأْذَنْۢ بِهِ اللّٰهُ ۗوَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ ۗوَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٢١

am lahum
أَمْ لَهُمْ
இவர்களுக்கு உண்டா?
shurakāu
شُرَكَٰٓؤُا۟
இணைதெய்வங்களும்
sharaʿū
شَرَعُوا۟
சட்டமாக்(கு)கி(ன்ற)னர்
lahum
لَهُم
இவர்களுக்கு
mina l-dīni
مِّنَ ٱلدِّينِ
மார்க்கத்தில்
mā lam yadhan
مَا لَمْ يَأْذَنۢ
எதை/அனுமதிக்கவில்லையோ
bihi
بِهِ
அதை
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
walawlā kalimatu l-faṣli
وَلَوْلَا كَلِمَةُ ٱلْفَصْلِ
தீர்ப்பின் வாக்கு மட்டும்/இல்லை என்றால்
laquḍiya
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْۗ
அவர்களுக்கு மத்தியில்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடியது
அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்கா விடில், (இதுவரையில்) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௧)
Tafseer
௨௨

تَرَى الظّٰلِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ ۗوَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِيْ رَوْضٰتِ الْجَنّٰتِۚ لَهُمْ مَّا يَشَاۤءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۗذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُ ٢٢

tarā
تَرَى
நீர் பார்ப்பீர்!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
mush'fiqīna
مُشْفِقِينَ
பயந்தவர்களாக
mimmā kasabū
مِمَّا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
wahuwa wāqiʿun
وَهُوَ وَاقِعٌۢ
அது நிகழ்ந்தே தீரும்
bihim
بِهِمْۗ
அவர்களுக்கு
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
fī rawḍāti
فِى رَوْضَاتِ
சோலைகளில்
l-janāti
ٱلْجَنَّاتِۖ
சொர்க்கங்களின்
lahum
لَهُم
அவர்களுக்கு உண்டு
mā yashāūna
مَّا يَشَآءُونَ
அவர்கள் நாடுகின்றவை
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْۚ
அவர்களின் இறைவனிடம்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-faḍlu
ٱلْفَضْلُ
சிறப்பாகும்
l-kabīru
ٱلْكَبِيرُ
மிகப் பெரிய
(நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீங்கள் காண்பீர்கள். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள், சுவனபதிகளில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௨)
Tafseer
௨௩

ذٰلِكَ الَّذِيْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ قُلْ لَّآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىۗ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ٢٣

dhālika
ذَٰلِكَ
இது
alladhī yubashiru
ٱلَّذِى يُبَشِّرُ
எது/நற்செய்தி கூறுகின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿibādahu
عِبَادَهُ
தன் அடியார்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِۗ
நன்மைகளை
qul
قُل
கூறுவீராக!
lā asalukum
لَّآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடத்தில் கேட்கவில்லை
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
ajran
أَجْرًا
எந்த கூலியையும்
illā l-mawadata
إِلَّا ٱلْمَوَدَّةَ
அன்பைத் தவிர
fī l-qur'bā
فِى ٱلْقُرْبَىٰۗ
உறவினால் உள்ள
waman yaqtarif
وَمَن يَقْتَرِفْ
யார் செய்வாரோ
ḥasanatan
حَسَنَةً
அழகிய அமலை
nazid
نَّزِدْ
அதிகப்படுத்துவோம்
lahu fīhā
لَهُۥ فِيهَا
அவருக்கு/அதில்
ḥus'nan
حُسْنًاۚ
அழகை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
shakūrun
شَكُورٌ
நன்றியறிபவன்
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன்னுடைய (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: இதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை (என்று). "உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்களைத் தேடிக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் நன்மையை அதிகரிக்கச் செய்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை(யும்) அங்கீகரிப்ப வனாகவும் இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௩)
Tafseer
௨௪

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًاۚ فَاِنْ يَّشَاِ اللّٰهُ يَخْتِمْ عَلٰى قَلْبِكَ ۗوَيَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ۗاِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٢٤

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
கூறுகிறார்களா?
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினார்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًاۖ
பொய்யை
fa-in yasha-i
فَإِن يَشَإِ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yakhtim
يَخْتِمْ
முத்திரையிட்டு விடுவான்
ʿalā qalbika
عَلَىٰ قَلْبِكَۗ
உமது உள்ளத்தின் மீது
wayamḥu
وَيَمْحُ
இன்னும் அழித்துவிடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-bāṭila
ٱلْبَٰطِلَ
பொய்யை
wayuḥiqqu
وَيُحِقُّ
இன்னும் உறுதிப்படுத்துவான்
l-ḥaqa
ٱلْحَقَّ
சத்தியத்தை
bikalimātihi
بِكَلِمَٰتِهِۦٓۚ
தனது கட்டளைகளைக் கொண்டு
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை
(நபியே!) அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்யைக் கற்பனை செய்து கூறுவதாக அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நம்முடைய இவ்வேதத்தை அவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பிக்க முடியாதவாறு) அல்லாஹ் நாடினால், உங்களது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு இருப்பான். (ஆகவே, அவர் களுடைய இக்கூற்று முற்றிலும் தவறானதாகும்.) அல்லாஹ்வோ, பொய்யை அழித்துத் தன் வசனங்களைக் கொண்டே உண்மையை உறுதிப்படுத்துபவனாக இருக்கின்றான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் (ரகசியமாக) உள்ளவைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௪)
Tafseer
௨௫

وَهُوَ الَّذِيْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَۙ ٢٥

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்/ எப்படிப்பட்டவன்
yaqbalu
يَقْبَلُ
ஏற்றுக்கொள்கிறான்
l-tawbata
ٱلتَّوْبَةَ
திருந்துவதை
ʿan ʿibādihi
عَنْ عِبَادِهِۦ
தனது அடியார்களிடமிருந்து
wayaʿfū
وَيَعْفُوا۟
இன்னும் மன்னிக்கிறான்
ʿani l-sayiāti
عَنِ ٱلسَّيِّـَٔاتِ
பாவங்களை
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிகின்றான்
mā tafʿalūna
مَا تَفْعَلُونَ
நீங்கள் செய்வதை
அவன்தான் தன் அடியார்களின் மன்னிப்புக்கோரலை அங்கீகரித்து(க் குற்றங்களையும்) மன்னித்து விடுகின்றான். நீங்கள் செய்பவைகளையும் அவன் நன்கறிகின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௫)
Tafseer
௨௬

وَيَسْتَجِيْبُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۗوَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ٢٦

wayastajību
وَيَسْتَجِيبُ
இன்னும் பதில் அளிக்கின்றான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
wayazīduhum
وَيَزِيدُهُم
இன்னும் அதிகம் கொடுப்பான் அவர்களுக்கு
min faḍlihi
مِّن فَضْلِهِۦۚ
தனது அருளால்
wal-kāfirūna
وَٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
shadīdun
شَدِيدٌ
கடுமையான(து)
அன்றி, நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களின் பிரார்த்தனைகளையும் அங்கீகரித்து, அவர்களுக்குத் தன்னுடைய அருளைப் பின்னும் (பின்னும்) அதிகப்படுத்துகின்றான். நிராகரிப்பவர்களுக்குக் கடினமான வேதனைதான் கிடைக்கும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௬)
Tafseer
௨௭

۞ وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِى الْاَرْضِ وَلٰكِنْ يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَاۤءُ ۗاِنَّهٗ بِعِبَادِهٖ خَبِيْرٌۢ بَصِيْرٌ ٢٧

walaw basaṭa
وَلَوْ بَسَطَ
விசாலமாக்கினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liʿibādihi
لِعِبَادِهِۦ
தனது அடியார்களுக்கு
labaghaw
لَبَغَوْا۟
அவர்கள் எல்லை மீறி விடுவார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walākin
وَلَٰكِن
என்றாலும்
yunazzilu
يُنَزِّلُ
இறக்குகின்றான்
biqadarin
بِقَدَرٍ
அளவுடன்
mā yashāu
مَّا يَشَآءُۚ
தான் நாடியதை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
அல்லாஹ் தன் அடியார்களுக்கு (கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகின்றான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௭)
Tafseer
௨௮

وَهُوَ الَّذِيْ يُنَزِّلُ الْغَيْثَ مِنْۢ بَعْدِ مَا قَنَطُوْا وَيَنْشُرُ رَحْمَتَهٗ ۗوَهُوَ الْوَلِيُّ الْحَمِيْدُ ٢٨

wahuwa
وَهُوَ
அவன்தான்
alladhī
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
yunazzilu
يُنَزِّلُ
இறக்குகின்றான்
l-ghaytha
ٱلْغَيْثَ
மழையை
min baʿdi mā qanaṭū
مِنۢ بَعْدِ مَا قَنَطُوا۟
அவர்கள் நிராசை அடைந்த பின்னர்
wayanshuru
وَيَنشُرُ
இன்னும் பரப்புகின்றான்
raḥmatahu
رَحْمَتَهُۥۚ
தனது அருளை
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-waliyu
ٱلْوَلِىُّ
பாதுகாவலன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
மகா புகழாளன்
(மனிதர்கள்) நம்பிக்கையிழந்ததன் பின்னரும், அவன்தான் மழையை இறக்கி வைத்துத் தன்னுடைய அருளை பொழிகின்றான். அவனே பாதுகாவலன்; புகழுக்குரியவன். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௮)
Tafseer
௨௯

وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَاۤبَّةٍ ۗوَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَاۤءُ قَدِيْرٌ ࣖ ٢٩

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦ
அவனது அத்தாட்சிகளில்
khalqu
خَلْقُ
படைத்திருப்பது
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்களையும் பூமியையும்
wamā batha
وَمَا بَثَّ
இன்னும் எவற்றை/பரத்தி இருக்கின்றானோ
fīhimā
فِيهِمَا
அவ்விரண்டில்
min dābbatin
مِن دَآبَّةٍۚ
உயிரினங்களில் இருந்து
wahuwa ʿalā jamʿihim
وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ
அவன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு
idhā yashāu
إِذَا يَشَآءُ
அவன் நாடுகின்றபோது
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், அவைகளில் கால்நடை (முதலிய பல உயிரினங்)களை (ஆங்காங்கு) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். ஆகவே, அவன் விரும்பியபோது (மரணித்த பின்னரும்) அவைகளை ஒன்று சேர்க்க ஆற்றுலுடையவனாக இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௯)
Tafseer
௩௦

وَمَآ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍۗ ٣٠

wamā aṣābakum
وَمَآ أَصَٰبَكُم
எது/உங்களுக்கு ஏற்பட்டதோ
min muṣībatin
مِّن مُّصِيبَةٍ
சோதனைகளில்
fabimā kasabat
فَبِمَا كَسَبَتْ
செய்தவற்றினால்தான்
aydīkum
أَيْدِيكُمْ
உங்கள் கரங்கள்
wayaʿfū
وَيَعْفُوا۟
இன்னும் மன்னித்துவிடுகிறான்
ʿan kathīrin
عَن كَثِيرٍ
அதிகமான தவறுகளை
யாதொரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், அவைகளில்) அனேகவற்றை அவன் மன்னித்து விடுகின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩௦)
Tafseer