Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Page: 2

Ash-Shuraa

(aš-Šūrā)

௧௧

فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًاۚ يَذْرَؤُكُمْ فِيْهِۗ لَيْسَ كَمِثْلِهٖ شَيْءٌ ۚوَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ١١

fāṭiru
فَاطِرُ
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
பூமியையும்
jaʿala
جَعَلَ
ஏற்படுத்தினான்
lakum
لَكُم
உங்களுக்கு
min anfusikum
مِّنْ أَنفُسِكُمْ
உங்களிலிருந்தே
azwājan
أَزْوَٰجًا
ஜோடிகளை(யும்)
wamina l-anʿāmi
وَمِنَ ٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகளில்
azwājan
أَزْوَٰجًاۖ
ஜோடிகளை(யும்)
yadhra-ukum
يَذْرَؤُكُمْ
படைக்கின்றான் உங்களை
fīhi laysa
فِيهِۚ لَيْسَ
அதில்/இல்லை
kamith'lihi
كَمِثْلِهِۦ
அவனைப் போன்று
shayon wahuwa
شَىْءٌۖ وَهُوَ
எதுவும்/அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-baṣīru
ٱلْبَصِيرُ
நன்கு பார்ப்பவன்
அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௧)
Tafseer
௧௨

لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۚاِنَّهٗ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١٢

lahu
لَهُۥ
அவனுக்கே உரியன
maqālīdu
مَقَالِيدُ
சாவிகள்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமி
yabsuṭu
يَبْسُطُ
விரிவாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُۚ
இன்னும் சுருக்குகின்றான்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன் ஆவான்
வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கின்றான்.) ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௨)
Tafseer
௧௩

۞ شَرَعَ لَكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖٓ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِيْهِۗ كَبُرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِۗ اَللّٰهُ يَجْتَبِيْٓ اِلَيْهِ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْٓ اِلَيْهِ مَنْ يُّنِيْبُۗ ١٣

sharaʿa
شَرَعَ
சட்டமாக்கினான்
lakum
لَكُم
உங்களுக்கு(ம்)
mina l-dīni
مِّنَ ٱلدِّينِ
மார்க்கத்தில்
مَا
எதை
waṣṣā
وَصَّىٰ
உபதேசித்தானோ
bihi
بِهِۦ
அதையே
nūḥan
نُوحًا
நூஹூக்கு
wa-alladhī
وَٱلَّذِىٓ
இன்னும் எதை
awḥaynā ilayka
أَوْحَيْنَآ إِلَيْكَ
நாம் வஹீ அறிவித்தோமோ/உமக்கு
wamā waṣṣaynā
وَمَا وَصَّيْنَا
இன்னும் எது/நாம் உபதேசித்தோமோ
bihi
بِهِۦٓ
அதை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீம்
wamūsā
وَمُوسَىٰ
இன்னும் மூஸா
waʿīsā
وَعِيسَىٰٓۖ
இன்னும் ஈஸா(விற்கு)
an aqīmū
أَنْ أَقِيمُوا۟
நிலை நிறுத்துங்கள்!
l-dīna
ٱلدِّينَ
இந்த மார்க்கத்தை
walā tatafarraqū
وَلَا تَتَفَرَّقُوا۟
நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!
fīhi kabura
فِيهِۚ كَبُرَ
அதில்/மிக பாரமாக ஆகிவிட்டது
ʿalā l-mush'rikīna
عَلَى ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு
مَا
எது/ அழைக்கின்றீரோ
tadʿūhum
تَدْعُوهُمْ
எது/ அழைக்கின்றீரோ அவர்களை
ilayhi
إِلَيْهِۚ
அதன் பக்கம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yajtabī
يَجْتَبِىٓ
தேர்ந்தெடுக்கின்றான்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
wayahdī
وَيَهْدِىٓ
இன்னும் வழி காட்டுகின்றான்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
man yunību
مَن يُنِيبُ
திரும்புகின்றவர்களுக்கு
(நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், "நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை நீங்கள் அழைக்கும் (ஓரிறை கொள்கையாகிய) இது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர் களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௩)
Tafseer
௧௪

وَمَا تَفَرَّقُوْٓا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِيَ بَيْنَهُمْۗ وَاِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْۢ بَعْدِهِمْ لَفِيْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ ١٤

wamā tafarraqū
وَمَا تَفَرَّقُوٓا۟
அவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லை
illā
إِلَّا
தவிர
min baʿdi mā
مِنۢ بَعْدِ مَا
வந்ததன் பின்னரே
jāahumu
جَآءَهُمُ
தங்களிடம்
l-ʿil'mu
ٱلْعِلْمُ
கல்வி
baghyan
بَغْيًۢا
பொறாமையினால்தான்
baynahum
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
walawlā
وَلَوْلَا
இருக்கவில்லை என்றால்
kalimatun
كَلِمَةٌ
ஒரு வாக்கு
sabaqat
سَبَقَتْ
முந்தி(யது)
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவன் புறத்தில் இருந்து
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
ஒரு தவணை வரை
musamman
مُّسَمًّى
குறிப்பிட்ட
laquḍiya
لَّقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
baynahum
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
alladhīna ūrithū
ٱلَّذِينَ أُورِثُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْ
பின்னர் இவர்களுக்கு
lafī shakkin
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
min'hu
مِّنْهُ
அதில்
murībin
مُرِيبٍ
பெரிய
அவர்கள் தங்களிடம் வேதம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உங்களது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவுபெற்றே இருக்கும். தவிர, அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்தை எவர்கள் அனந்தரம் கொண்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௪)
Tafseer
௧௫

فَلِذٰلِكَ فَادْعُ ۚوَاسْتَقِمْ كَمَآ اُمِرْتَۚ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْۚ وَقُلْ اٰمَنْتُ بِمَآ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمْ ۗ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ۗ لَنَآ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۗ لَاحُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ ۗ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا ۚوَاِلَيْهِ الْمَصِيْرُ ۗ ١٥

falidhālika
فَلِذَٰلِكَ
இதன் பக்கமே
fa-ud'ʿu
فَٱدْعُۖ
நீர் அழைப்பீராக
wa-is'taqim
وَٱسْتَقِمْ
இன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராக
kamā umir'ta
كَمَآ أُمِرْتَۖ
நீர் கட்டளையிடப்பட்டது போன்றே
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
நீர் பின்பற்றாதீர்
ahwāahum
أَهْوَآءَهُمْۖ
மன விருப்பங்களை அவர்களின்
waqul
وَقُلْ
இன்னும் நீர் கூறுவிராக
āmantu
ءَامَنتُ
நான் நம்பிக்கை கொண்டேன்
bimā anzala
بِمَآ أَنزَلَ
இறக்கியதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min kitābin
مِن كِتَٰبٍۖ
வேதங்களில் இருந்து
wa-umir'tu
وَأُمِرْتُ
பணிக்கப்பட்டுள்ளேன்
li-aʿdila
لِأَعْدِلَ
நீதமாக நடக்க வேண்டும் என்று
baynakumu
بَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியில்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
rabbunā
رَبُّنَا
இன்னும் உங்களுக்கு
warabbukum
وَرَبُّكُمْۖ
இன்னும் உங்கள் அமல்கள்
lanā
لَنَآ
எங்களுக்கு
aʿmālunā
أَعْمَٰلُنَا
எங்கள் அமல்கள்
walakum
وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
aʿmālukum
أَعْمَٰلُكُمْۖ
உங்கள் அமல்கள்
lā ḥujjata
لَا حُجَّةَ
சண்டை வேண்டாம்
baynanā
بَيْنَنَا
நமக்கு மத்தியிலும்
wabaynakumu
وَبَيْنَكُمُۖ
உங்களுக்கு மத்தியிலும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yajmaʿu
يَجْمَعُ
ஒன்று சேர்ப்பான்
baynanā
بَيْنَنَاۖ
நமக்கு மத்தியில்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி) னளவில் (அவர்களை) நீங்கள் அழையுங்கள். உங்களுக்கு ஏவப்பட்டபடி நீங்கள் உறுதியாக இருங்கள். அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். பின்னும் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: அல்லாஹ் வேதமென்று எதனை இறக்கி வைத்தானோ அதனையே நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ் தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயலுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயலுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் யாதொரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௫)
Tafseer
௧௬

وَالَّذِيْنَ يُحَاۤجُّوْنَ فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا اسْتُجِيْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ١٦

wa-alladhīna yuḥājjūna
وَٱلَّذِينَ يُحَآجُّونَ
எவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோ
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā us'tujība
مَا ٱسْتُجِيبَ
ஏற்றுக்கொண்டதன்
lahu
لَهُۥ
அவனை
ḥujjatuhum
حُجَّتُهُمْ
அவர்களின்வாதங்கள்
dāḥiḍatun
دَاحِضَةٌ
வீணானதே!
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அல்லாஹ்விடம்
waʿalayhim ghaḍabun
وَعَلَيْهِمْ غَضَبٌ
இன்னும் அவர்கள் மீது இறங்கும்/கோபம்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
வேதனையும்
shadīdun
شَدِيدٌ
கடுமையான
எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௬)
Tafseer
௧௭

اَللّٰهُ الَّذِيْٓ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ ۗوَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ ١٧

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِىٓ
அல்லாஹ்/ எப்படிப்பட்டவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்துடன்
wal-mīzāna
وَٱلْمِيزَانَۗ
தராசையும்
wamā yud'rīka
وَمَا يُدْرِيكَ
உமக்கு எது அறிவிக்கும்?
laʿalla l-sāʿata
لَعَلَّ ٱلسَّاعَةَ
மறுமை
qarībun
قَرِيبٌ
மிக சமீபமானது
அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடியஇவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீங்கள் அறிவீர்களா! ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௭)
Tafseer
௧௮

يَسْتَعْجِلُ بِهَا الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَاۚ وَالَّذِيْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَاۙ وَيَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ۗ اَلَآ اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَ فِى السَّاعَةِ لَفِيْ ضَلٰلٍۢ بَعِيْدٍ ١٨

yastaʿjilu bihā
يَسْتَعْجِلُ بِهَا
அவசரமாகத் தேடுகின்றனர்/அதை
alladhīna lā yu'minūna bihā
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَاۖ
நம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதை
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
mush'fiqūna
مُشْفِقُونَ
பயப்படுகின்றனர்
min'hā
مِنْهَا
அதை
wayaʿlamūna
وَيَعْلَمُونَ
இன்னும் அறிவார்கள்
annahā
أَنَّهَا
நிச்சயமாக அது
l-ḥaqu
ٱلْحَقُّۗ
உண்மைதான்
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna alladhīna yumārūna
إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ
நிச்சயமாக தர்க்கிப்பவர்கள்
fī l-sāʿati
فِى ٱلسَّاعَةِ
மறுமை விஷயத்தில்
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍۭ
வழிகேட்டில்தான்
baʿīdin
بَعِيدٍ
வெகு தூரமான
மறுமையை நம்பாதவர்கள் அதனைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதனை நம்பியிருக்கின்றார்களோ அவர்கள் அதனைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கின் றார்கள் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௮)
Tafseer
௧௯

اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ ۚوَهُوَ الْقَوِيُّ الْعَزِيْزُ ࣖ ١٩

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
laṭīfun
لَطِيفٌۢ
மிக கருணையும் தயவும் உடையவன்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தன் அடியார்கள் மீது
yarzuqu
يَرْزُقُ
உணவளிக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவர்களுக்கு
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-qawiyu
ٱلْقَوِىُّ
மிக வலிமை உள்ளவன்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௯)
Tafseer
௨௦

مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِيْ حَرْثِهٖۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَاۙ وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ ٢٠

man
مَن
யார்
kāna
كَانَ
இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
நாடுகின்றவராக
ḥartha
حَرْثَ
விளைச்சலை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
nazid
نَزِدْ
நாம் அதிகப்படுத்துவோம்
lahu
لَهُۥ
அவருக்கு
fī ḥarthihi
فِى حَرْثِهِۦۖ
அவருடைய விளைச்சலில்
waman kāna
وَمَن كَانَ
இன்னும் யார்/இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
நாடுகின்றவராக
ḥartha
حَرْثَ
விளைச்சலை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தின்
nu'tihi
نُؤْتِهِۦ
அவருக்கு நாம் கொடுப்போம்
min'hā
مِنْهَا
அதில் இருந்து
wamā lahu
وَمَا لَهُۥ
இல்லை/அவருக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
min naṣībin
مِن نَّصِيبٍ
எவ்வித பங்கும்
எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். எனினும், அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨௦)
Tafseer