Skip to content

ஸூரா ஸூரத்துஷ் ஷூறா - Word by Word

Ash-Shuraa

(aš-Šūrā)

bismillaahirrahmaanirrahiim

حٰمۤ ۚ ١

hha-meem
حمٓ
ஹா மீம்
ஹாமீம். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧)
Tafseer

عۤسۤقۤ ۗ ٢

ain-seen-qaf
عٓسٓقٓ
அய்ன் சீன் காஃப்
அய்ன் ஸீன் காஃப். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௨)
Tafseer

كَذٰلِكَ يُوْحِيْٓ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٣

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yūḥī
يُوحِىٓ
வஹீ அறிவித்தான்
ilayka
إِلَيْكَ
உமக்கும்
wa-ilā alladhīna min qablika
وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ
உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவனும்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவானும்
(நபியே! இந்த அத்தியாயம் உங்களுக்கு அருள் செய்யப்படுகின்றது.) இவ்வாறே உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானமிக்கவனுமான அல்லாஹ் (தன்னுடைய வசனங்களை) வஹீ மூலம் அறிவித்து வந்திருக்கின்றான். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௩)
Tafseer

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ ٤

lahu
لَهُۥ
அவனுக்குத்தான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவையும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
பூமியில்உள்ளவையும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿaliyu
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மிக மகத்தானவன்
வானங்களில் இருப்பவைகளும், பூமியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. (அனைவரையும்விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௪)
Tafseer

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰۤىِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِۗ اَلَآ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ٥

takādu
تَكَادُ
நெருங்கி விடுகின்றன
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
yatafaṭṭarna
يَتَفَطَّرْنَ
(அவை) பிளந்துவிடுவதற்கு
min fawqihinna
مِن فَوْقِهِنَّۚ
அவற்றுக்கு மேல் உள்ள
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
yusabbiḥūna
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
wayastaghfirūna
وَيَسْتَغْفِرُونَ
இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர்
liman fī l-arḍi
لِمَن فِى ٱلْأَرْضِۗ
பூமியில் உள்ளவர்களுக்காக
alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna l-laha huwa
إِنَّ ٱللَّهَ هُوَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகாக் கருணையாளன்
(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) மலக்குகளும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௫)
Tafseer

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْۖ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ ٦

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
உதவியாளர்களாக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
ḥafīẓun
حَفِيظٌ
கண்காணிப்பவன்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wamā anta
وَمَآ أَنتَ
நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
பொறுப்பாளர்
எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கின்றான். (நபியே!) அவர்களுக்கு நீங்கள் பொறுப்பாளரல்ல. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௬)
Tafseer

وَكَذٰلِكَ اَوْحَيْنَآ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ ۗفَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ ٧

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
qur'ānan
قُرْءَانًا
குர்ஆனை
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி மொழியில்
litundhira
لِّتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
umma l-qurā
أُمَّ ٱلْقُرَىٰ
மக்காவாசிகளை
waman ḥawlahā
وَمَنْ حَوْلَهَا
இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
watundhira
وَتُنذِرَ
இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
yawma
يَوْمَ
மறுமை நாளைப் பற்றி
l-jamʿi
ٱلْجَمْعِ
ஒன்று சேர்க்கப்படும்
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi farīqun
فِيهِۚ فَرِيقٌ
அதில்/ஓர் அணி
fī l-janati
فِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
wafarīqun
وَفَرِيقٌ
இன்னும் ஓர் அணி
fī l-saʿīri
فِى ٱلسَّعِيرِ
நரகத்தில்
(நபியே!) இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்தோம். (இதனைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சூழ்ந்த கிராமங்களில் வசிப்பவர்களையும், நீங்கள் எச்சரிக்கை செய்து அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று சேரக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுங்கள்! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனபதிக்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௭)
Tafseer

وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ٨

walaw shāa
وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lajaʿalahum
لَجَعَلَهُمْ
அவர்களை ஆக்கியிருப்பான்
ummatan
أُمَّةً
மார்க்கமுடையவர்களாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
walākin
وَلَٰكِن
என்றாலும்
yud'khilu
يُدْخِلُ
நுழைக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவர்களை
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
wal-ẓālimūna
وَٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
mā lahum
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
min waliyyin
مِّن وَلِىٍّ
எந்த பாதுகாவலரும்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
எந்த உதவியாளரும் இல்லை
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை. ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௮)
Tafseer

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۚ فَاللّٰهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِ الْمَوْتٰى ۖوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ٩

ami ittakhadhū
أَمِ ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
awliyāa
أَوْلِيَآءَۖ
பாதுகாவலர்களை
fal-lahu huwa
فَٱللَّهُ هُوَ
அல்லாஹ்தான்
l-waliyu
ٱلْوَلِىُّ
பாதுகாவலன்
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்தான்
yuḥ'yī
يُحْىِ
உயிர்ப்பிப்பான்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் ஒருவன்தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௯)
Tafseer
௧௦

وَمَا اخْتَلَفْتُمْ فِيْهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهٗٓ اِلَى اللّٰهِ ۗذٰلِكُمُ اللّٰهُ رَبِّيْ عَلَيْهِ تَوَكَّلْتُۖ وَاِلَيْهِ اُنِيْبُ ١٠

wamā ikh'talaftum fīhi
وَمَا ٱخْتَلَفْتُمْ فِيهِ
எது/முரண்படுகிறீர்களோ/அதில்
min shayin
مِن شَىْءٍ
எந்த ஒரு விஷயம்
faḥuk'muhu
فَحُكْمُهُۥٓ
அதன் இறுதி தீர்ப்பு
ilā l-lahi
إِلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் பக்கம்தான்
dhālikumu l-lahu
ذَٰلِكُمُ ٱللَّهُ
அந்த அல்லாஹ்தான்
rabbī
رَبِّى
என் இறைவன்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்துள்ளேன்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
unību
أُنِيبُ
திரும்புகின்றேன்
(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பியும் அவனையே நான் நோக்கியும் நிற்கின்றேன்." ([௪௨] ஸூரத்துஷ் ஷூறா: ௧௦)
Tafseer