குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௬
Qur'an Surah Fussilat Verse 6
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّمَآ اَنَا۟ بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰىٓ اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْٓا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ ۗوَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَۙ (فصلت : ٤١)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- innamā anā
- إِنَّمَآ أَنَا۠
- "Only I am
- நான் எல்லாம்
- basharun
- بَشَرٌ
- a man
- ஒரு மனிதர்தான்
- mith'lukum
- مِّثْلُكُمْ
- like you
- உங்களைப் போன்ற
- yūḥā
- يُوحَىٰٓ
- it is revealed
- வஹீ அறிவிக்கப்படுகிறது
- ilayya
- إِلَىَّ
- to me
- எனக்கு
- annamā ilāhukum
- أَنَّمَآ إِلَٰهُكُمْ
- that your god
- உங்கள் கடவுள் எல்லாம்
- ilāhun wāḥidun
- إِلَٰهٌ وَٰحِدٌ
- (is) God One;
- ஒரே ஒருகடவுள்தான்
- fa-is'taqīmū
- فَٱسْتَقِيمُوٓا۟
- so take a Straight Path
- ஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்!
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கமே
- wa-is'taghfirūhu
- وَٱسْتَغْفِرُوهُۗ
- and ask His forgiveness"
- இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
- wawaylun lil'mush'rikīna
- وَوَيْلٌ لِّلْمُشْرِكِينَ
- And woe to the polytheists
- நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
Transliteration:
Qul innamaaa ana basharum mislukum yoohaaa ilaiya annamaaa ilaahukum Ilaahunw Waahidun fastaqeemooo ilaihi wastagfirooh; wa wailul lil mushrikeen(QS. Fuṣṣilat:6)
English Sahih International:
Say, [O Muhammad], "I am only a man like you to whom it has been revealed that your god is but one God; so take a straight course to Him and seek His forgiveness." And woe to those who associate others with Allah (QS. Fussilat, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் மன்னிப்பையும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௬)
Jan Trust Foundation
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) கூறுவீராக! நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது: “உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் (-படைத்துப் பரிபாலிக்கின்ற உங்கள் இறைவனை மட்டும் வணங்குங்கள்).” ஆகவே, அவன் பக்கமே (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி நடங்கள்! அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.