Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௫௩

Qur'an Surah Fussilat Verse 53

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِيْٓ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّۗ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ (فصلت : ٤١)

sanurīhim
سَنُرِيهِمْ
Soon We will show them
விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்
āyātinā
ءَايَٰتِنَا
Our Signs
நமது அத்தாட்சிகளை
fī l-āfāqi
فِى ٱلْءَافَاقِ
in the horizons
பல பகுதிகளிலும்
wafī anfusihim
وَفِىٓ أَنفُسِهِمْ
and in themselves
அவர்களிலும்
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
yatabayyana
يَتَبَيَّنَ
becomes clear
தெளிவாகிவிடும்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
annahu
أَنَّهُ
that it
நிச்சயமாக இதுதான்
l-ḥaqu
ٱلْحَقُّۗ
(is) the truth
உண்மை
awalam yakfi
أَوَلَمْ يَكْفِ
Is (it) not sufficient
போதாதா?
birabbika
بِرَبِّكَ
concerning your Lord
உமது இறைவனுக்கு
annahu
أَنَّهُۥ
that He
நிச்சயமாக தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) over all things
எல்லாவற்றையும்
shahīdun
شَهِيدٌ
a Witness?
நன்கு பார்ப்பவனாக

Transliteration:

Sanureehim Aayaatinaa fil aafaaqi wa feee anfusihim hattaa yatabaiyana lahum annahul haqq; awa lam yakfi bi Rabbika annahoo 'alaa kulli shai-in Shaheed (QS. Fuṣṣilat:53)

English Sahih International:

We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness? (QS. Fussilat, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது (உங்களுக்கு) போதாதா? (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௫௩)

Jan Trust Foundation

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக தான் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருகின்றான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும் இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?