குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௫
Qur'an Surah Fussilat Verse 5
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا قُلُوْبُنَا فِيْٓ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَآ اِلَيْهِ وَفِيْٓ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ (فصلت : ٤١)
- waqālū
- وَقَالُوا۟
- And they say
- அவர்கள் கூறினார்கள்
- qulūbunā
- قُلُوبُنَا
- "Our hearts
- எங்கள் உள்ளங்கள்
- fī akinnatin
- فِىٓ أَكِنَّةٍ
- (are) in coverings
- திரைகளில்தான்
- mimmā tadʿūnā
- مِّمَّا تَدْعُونَآ
- from what you call us
- எதில்/நீர் எங்களை அழைக்கின்றீர்களோ
- ilayhi
- إِلَيْهِ
- to it
- அதன் பக்கம்
- wafī ādhāninā
- وَفِىٓ ءَاذَانِنَا
- and in our ears
- இன்னும் எங்கள்செவிகளில்
- waqrun
- وَقْرٌ
- (is) deafness
- செவிட்டுத்தனம்
- wamin bayninā
- وَمِنۢ بَيْنِنَا
- and between us and between us
- இன்னும் எங்களுக்கு மத்தியிலும்
- wabaynika
- وَبَيْنِكَ
- and between you
- உமக்கு மத்தியிலும்
- ḥijābun
- حِجَابٌ
- (is) a screen
- ஒரு திரை
- fa-iʿ'mal
- فَٱعْمَلْ
- So work
- ஆகவே நீர் செய்வீராக!
- innanā
- إِنَّنَا
- indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- ʿāmilūna
- عَٰمِلُونَ
- (are) working"
- செய்வோம்
Transliteration:
Wa qaaloo quloobunaa feee akinnatim mimmaa tad'oonaaa ilaihi wa feee aazaaninaa waqrunw wa mim baininaa wa bainika bijaabun fa'mal innanaa 'aamiloon(QS. Fuṣṣilat:5)
English Sahih International:
And they say, "Our hearts are within coverings [i.e., screened] from that to which you invite us, and in our ears is deafness, and between us and you is a partition, so work; indeed, we are working." (QS. Fussilat, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அன்றி, "நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ (அதனைக் கவனிக்க முடியாதபடி) எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீங்கள் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்களுடைய செவிகள் செவிடுபட்டுவிட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (விரும்பியதைச்) செய்து கொண்டிருங்கள். நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்" என்றும், (இதனை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௫)
Jan Trust Foundation
மேலும் அவர்கள்| “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினார்கள்: நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும் எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (எங்களை உம்மிடமிருந்து தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.