Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௮

Qur'an Surah Fussilat Verse 48

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ (فصلت : ٤١)

waḍalla
وَضَلَّ
And lost
இன்னும் மறைந்துவிடும்
ʿanhum
عَنْهُم
from them
அவர்களை விட்டும்
mā kānū yadʿūna
مَّا كَانُوا۟ يَدْعُونَ
what they were invoking
அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை
min qablu
مِن قَبْلُۖ
before before
இதற்கு முன்னர்
waẓannū
وَظَنُّوا۟
and they (will) be certain
இன்னும் அறிந்து கொள்வார்கள்
mā lahum
مَا لَهُم
(that) not for them
தங்களுக்கு இல்லை
min maḥīṣin
مِّن مَّحِيصٍ
any place of escape
தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்

Transliteration:

Wa dalla 'anhum maa kaanoo yad'oona min qablu wa zannoo maa lahum mim mahees (QS. Fuṣṣilat:48)

English Sahih International:

And lost from them will be those they were invoking before, and they will be certain that they have no place of escape. (QS. Fussilat, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவைகளெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னர் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும். தப்பிப்பதற்குரிய இடம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.