Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௭

Qur'an Surah Fussilat Verse 47

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِلَيْهِ يُرَدُّ عِلْمُ السَّاعَةِ ۗوَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ ِمّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ۗوَيَوْمَ يُنَادِيْهِمْ اَيْنَ شُرَكَاۤءِيْۙ قَالُوْٓا اٰذَنّٰكَ مَا مِنَّا مِنْ شَهِيْدٍ ۚ (فصلت : ٤١)

ilayhi
إِلَيْهِ
To Him
அவன் பக்கமே
yuraddu
يُرَدُّ
is referred
திருப்பப்படுகிறது
ʿil'mu
عِلْمُ
(the) knowledge
அறிவு
l-sāʿati
ٱلسَّاعَةِۚ
(of) the Hour
மறுமையைப் பற்றிய
wamā takhruju
وَمَا تَخْرُجُ
And not comes out
வெளிவருவதில்லை
min thamarātin
مِن ثَمَرَٰتٍ
any fruits
பழங்களில் எதுவும்
min akmāmihā
مِّنْ أَكْمَامِهَا
from their coverings
அவற்றின் பாலைகளில் இருந்து
wamā taḥmilu
وَمَا تَحْمِلُ
and not bears
கர்ப்பமடைவதுமில்லை
min unthā
مِنْ أُنثَىٰ
any female
பெண்களில் எவரும்
walā taḍaʿu
وَلَا تَضَعُ
and not gives birth
இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை
illā biʿil'mihi
إِلَّا بِعِلْمِهِۦۚ
except with His knowledge
அவனது ஞானமில்லாமல்
wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
yunādīhim
يُنَادِيهِمْ
He will call them
அவர்களை அவன் அழைக்கின்ற
ayna
أَيْنَ
"Where (are)
எங்கே
shurakāī
شُرَكَآءِى
My partners
எனது இணைகள்
qālū
قَالُوٓا۟
They will say
அவர்கள்கூறுவார்கள்
ādhannāka
ءَاذَنَّٰكَ
"We announce (to) You
நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்
mā minnā
مَا مِنَّا
not among us
எங்களில் இல்லை
min shahīdin
مِن شَهِيدٍ
any witness"
சாட்சி சொல்பவர் யாரும்

Transliteration:

Ilaihi yuraddu 'ilmus Saaa'ah; wa maa takhruju min samaraatim min akmaamihaa wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa Yawma yunaadeehim aina shurakaaa'ee qaalooo aazannaaka maa minnaa min shaheed (QS. Fuṣṣilat:47)

English Sahih International:

To Him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]." (QS. Fussilat, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! "விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?" என அவர்கள் அடிக்கடி உங்களிடம் கேட்கின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் யாதொரு கனியும் அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை. யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு இணையாக்கியவை(களாகிய பொய்யான தெய்வங்)கள் எங்கே?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "எங்களில் அவ்வாறு கூறுபவர்கள் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று (எங்கள் இறைவனே!) உனக்கு அறிவித்து விடுகின்றோம்" என்று கூறுவார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. அவனது (அல்லாஹ்வின்) ஞானமில்லாமல் பழங்களில் இருந்து எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை “எனது இணைகள் (என்று நீங்கள் வணங்கியவை இப்போது) எங்கே?” என்று அவன் (அல்லாஹ்) அவர்களை (-இணைவைப்பவர்களை) அழை(த்து) (கேட்)க்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்”