Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௩

Qur'an Surah Fussilat Verse 43

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا يُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِيْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ۗاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِيْمٍ (فصلت : ٤١)

mā yuqālu
مَّا يُقَالُ
Not is said
சொல்லப்படாது
laka
لَكَ
to you
உமக்கு
illā mā
إِلَّا مَا
except what
தவிர/எது
qad
قَدْ
was said
திட்டமாக
qīla
قِيلَ
was said
சொல்லப்பட்டதோ
lilrrusuli
لِلرُّسُلِ
to the Messengers
தூதர்களுக்கு
min qablika
مِن قَبْلِكَۚ
before you before you
உமக்கு முன்னர்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவன்
ladhū maghfiratin
لَذُو مَغْفِرَةٍ
(is) Possessor (of) forgiveness
மன்னிப்புடையவன்
wadhū ʿiqābin
وَذُو عِقَابٍ
and Possessor (of) penalty
இன்னும் தண்டனைஉடையவன்
alīmin
أَلِيمٍ
painful
வலி தரக்கூடியது

Transliteration:

Maa yuqaalu laka illaa maa qad qeela lir Rusuli min qablik; inna Rabbaka lazoo maghfiratinw wa zoo 'iqaabin aleem (QS. Fuṣṣilat:43)

English Sahih International:

Nothing is said to you, [O Muhammad], except what was already said to the messengers before you. Indeed, your Lord is a possessor of forgiveness and a possessor of painful penalty. (QS. Fussilat, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனைத் தவிர (வேறொன்றும்) உங்களுக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நிச்சயமாக உங்களது இறைவன் (நல்லவர்களை) மிக மன்னிப்பவனாகவும், (தீயவர்களைத்) துன்புறுத்தி வேதனை செய்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தரக்கூடிய தண்டனை உடையவன் ஆவான்.