Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩௯

Qur'an Surah Fussilat Verse 39

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْ اٰيٰتِهٖٓ اَنَّكَ تَرَى الْاَرْضَ خَاشِعَةً فَاِذَآ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَاۤءَ اهْتَزَّتْ وَرَبَتْۗ اِنَّ الَّذِيْٓ اَحْيَاهَا لَمُحْيِ الْمَوْتٰى ۗاِنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (فصلت : ٤١)

wamin āyātihi
وَمِنْ ءَايَٰتِهِۦٓ
And among His Signs
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
annaka
أَنَّكَ
(is) that you
நிச்சயமாக நீர்
tarā
تَرَى
see
பார்க்கின்றீர்
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
khāshiʿatan
خَٰشِعَةً
barren
காய்ந்ததாக
fa-idhā anzalnā
فَإِذَآ أَنزَلْنَا
but when We send down
பிறகு, நாம் இறக்கினால்
ʿalayhā
عَلَيْهَا
upon it
அதன் மீது
l-māa
ٱلْمَآءَ
water
நீரை
ih'tazzat
ٱهْتَزَّتْ
it is stirred (to life)
செழிப்படைகிறது
warabat
وَرَبَتْۚ
and grows
இன்னும் அது வளர்கிறது
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhī aḥyāhā
ٱلَّذِىٓ أَحْيَاهَا
the One Who gives it life
எவன்/உயிர்ப்பித்தான்/அதை
lamuḥ'yī
لَمُحْىِ
(is) surely the Giver of life
உயிர்ப்பிப்பவன்
l-mawtā
ٱلْمَوْتَىٰٓۚ
(to) the dead
மரணித்தவர்களை(யும்)
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) on every thing
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Wa min Aayaatiheee annaka taral arda khaashi'atan fa izaaa anzalna 'alaihal maaa'ah tazzat wa rabat; innal lazeee ahyaahaa lamuhiyil mawtaa; innahoo 'alaa kulli shai-in Qadeer (QS. Fuṣṣilat:39)

English Sahih International:

And of His signs is that you see the earth stilled, but when We send down upon it rain, it quivers and grows. Indeed, He who has given it life is the Giver of Life to the dead. Indeed, He is over all things competent. (QS. Fussilat, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீங்கள் காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன்மீது நாம் மழையை பொழியச் செய்தால், அதில் (முளை கிளம்பிப்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்துபோன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) ஆற்றலுடையவன். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கின்றீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைகிறது, வளர்கிறது. நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.