Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩௪

Qur'an Surah Fussilat Verse 34

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ۗاِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ فَاِذَا الَّذِيْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِيٌّ حَمِيْمٌ (فصلت : ٤١)

walā tastawī
وَلَا تَسْتَوِى
And not are equal
சமமாகாது
l-ḥasanatu
ٱلْحَسَنَةُ
the good (deed)
நன்மையும்
walā l-sayi-atu
وَلَا ٱلسَّيِّئَةُۚ
and the evil (deed)
தீமையும்
id'faʿ
ٱدْفَعْ
Repel
தடுப்பீராக!
bi-allatī hiya aḥsanu
بِٱلَّتِى هِىَ أَحْسَنُ
by (that) which [it] (is) better;
மிக அழகியதைக் கொண்டு
fa-idhā
فَإِذَا
then behold!
அப்போது
alladhī baynaka
ٱلَّذِى بَيْنَكَ
One who between you
எவர்/உமக்கு இடையில்
wabaynahu
وَبَيْنَهُۥ
and between him
ஒருவருக்கும்
ʿadāwatun
عَدَٰوَةٌ
(was) enmity
பகைமை
ka-annahu
كَأَنَّهُۥ
as if he
போல்/அவர்
waliyyun
وَلِىٌّ
(was) a friend
ஓர் உறவுக்காரரை
ḥamīmun
حَمِيمٌ
intimate
நெருக்கமான

Transliteration:

Wa laa tastawil hasanatu wa las saiyi'ah; idfa' billatee hiya ahsanu fa'izal lazee bainaka wa bainahoo 'adaawatun ka'annahoo waliyun hameem (QS. Fuṣṣilat:34)

English Sahih International:

And not equal are the good deed and the bad. Repel [evil] by that [deed] which is better; and thereupon, the one whom between you and him is enmity [will become] as though he was a devoted friend. (QS. Fussilat, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் நெருக்கமான ஓர் உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார்.