Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨௯

Qur'an Surah Fussilat Verse 29

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا رَبَّنَآ اَرِنَا الَّذَيْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِيَكُوْنَا مِنَ الْاَسْفَلِيْنَ (فصلت : ٤١)

waqāla
وَقَالَ
And (will) say
கூறுவார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பவர்கள்
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவா
arinā
أَرِنَا
Show us
எங்களுக்குக் காண்பி
alladhayni aḍallānā
ٱلَّذَيْنِ أَضَلَّانَا
those who misled us
எவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களை
mina l-jini wal-insi
مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ
of the jinn and the men
ஜின் மற்றும் மனிதர்களில்
najʿalhumā
نَجْعَلْهُمَا
(so) we may put them
அ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்
taḥta aqdāminā
تَحْتَ أَقْدَامِنَا
under our feet
எங்கள் பாதங்களுக்குக் கீழ்
liyakūnā
لِيَكُونَا
that they be
ஆகிவிடுவதற்காக
mina l-asfalīna
مِنَ ٱلْأَسْفَلِينَ
of the lowest"
மிகக் கீழ்த்தரமானவர்களில்

Transliteration:

Wa qaalal lazeena kafaroo Rabbanaaa arinal lazaini adal laanaa minal jinni wal insi naj'alhumaa tahta aqdaaminaa liyakoonaa minal asfaleen (QS. Fuṣṣilat:29)

English Sahih International:

And those who disbelieved will [then] say, "Our Lord, show us those who misled us of the jinn and men [so] we may put them under our feet that they will be among the lowest." (QS. Fussilat, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

(அந்நாளில்|) காஃபிர்கள்| “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்:எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பி! அவர்கள் (-வழிகெடுத்த அந்த இரு சாரார்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கிக் கொள்கிறோம்.