Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨௧

Qur'an Surah Fussilat Verse 21

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا ۗقَالُوْٓا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِيْٓ اَنْطَقَ كُلَّ شَيْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍۙ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ (فصلت : ٤١)

waqālū
وَقَالُوا۟
And they will say
அவர்கள் கூறுவார்கள்
lijulūdihim
لِجُلُودِهِمْ
to their skins
தங்களுடைய தோல்களிடம்
lima shahidttum
لِمَ شَهِدتُّمْ
"Why do you testify
ஏன் சாட்சிகூறினீர்கள்
ʿalaynā
عَلَيْنَاۖ
against us?"
எங்களுக்கு எதிராக
qālū
قَالُوٓا۟
They will say
அவை கூறும்
anṭaqanā
أَنطَقَنَا
"Allah made us speak
எங்களை(யும்) பேச வைத்தான்
l-lahu
ٱللَّهُ
"Allah made us speak
அல்லாஹ்
alladhī anṭaqa
ٱلَّذِىٓ أَنطَقَ
the One Who makes speak
எவன்/பேசவைத்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
every thing
எல்லாவற்றையும்
wahuwa
وَهُوَ
and He
அவன்தான்
khalaqakum
خَلَقَكُمْ
created you
உங்களைப் படைத்தான்
awwala marratin
أَوَّلَ مَرَّةٍ
(the) first time
முதல் முறையாக
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
இன்னும் அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned"
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Wa qaaloo lijuloodihim lima shahittum 'alainaa qaaloo antaqanal laahul lazeee antaqa kulla shai'inw wa Huwa khalaqakum awwala marratinw wa ilaihi turja'oon (QS. Fuṣṣilat:21)

English Sahih International:

And they will say to their skins, "Why have you testified against us?" They will say, "We were made to speak by Allah, who has made everything speak; and He created you the first time, and to Him you are returned. (QS. Fussilat, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, "எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?" என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை| “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுடைய தோல்களிடம் “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள் என்று கூறுவார்கள்.” அதற்கு அவை கூறும்: எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.