Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨௦

Qur'an Surah Fussilat Verse 20

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰىٓ اِذَا مَا جَاۤءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (فصلت : ٤١)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā mā jāūhā
إِذَا مَا جَآءُوهَا
when when they come to it
அவர்கள் அதனிடம் வரும் போது
shahida
شَهِدَ
(will) testify
சாட்சி கூறும்
ʿalayhim
عَلَيْهِمْ
against them
அவர்களுக்கு எதிராகவே
samʿuhum
سَمْعُهُمْ
their hearing
அவர்களுடைய செவி(யும்)
wa-abṣāruhum
وَأَبْصَٰرُهُمْ
and their sight
அவர்களுடைய பார்வைகளும்
wajulūduhum
وَجُلُودُهُم
and their skins
அவர்களுடைய தோல்களும்
bimā kānū yaʿmalūna
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
(as) to what they used (to) do
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி

Transliteration:

Hattaaa izaa maa jaaa'oohaa shahida 'alaihim samu'uhum wa absaaruhum wa julooduhum bimaa kaanoo ya'maloon (QS. Fuṣṣilat:20)

English Sahih International:

Until, when they reach it, their hearing and their eyes and their skins will testify against them of what they used to do. (QS. Fussilat, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும். (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, அவர்கள் அதனிடம் (-நரகத்திற்கு அருகில்) வரும் போது அவர்களுடைய செவியும் அவர்களுடைய பார்வைகளும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு எதிராகவே சாட்சி கூறும்.