Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௭

Qur'an Surah Fussilat Verse 17

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا ثَمُوْدُ فَهَدَيْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰى عَلَى الْهُدٰى فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ۚ (فصلت : ٤١)

wa-ammā thamūdu
وَأَمَّا ثَمُودُ
And as for Thamud
ஆக, ஸமூது சமுதாயம்
fahadaynāhum
فَهَدَيْنَٰهُمْ
We guided them
அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்
fa-is'taḥabbū
فَٱسْتَحَبُّوا۟
but they preferred
(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்
l-ʿamā
ٱلْعَمَىٰ
[the] blindness
குருட்டுத் தனத்தைத்தான்
ʿalā l-hudā
عَلَى ٱلْهُدَىٰ
over the guidance
நேர்வழியை விட
fa-akhadhathum
فَأَخَذَتْهُمْ
so seized them
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ṣāʿiqatu
صَٰعِقَةُ
a thunderbolt
பேரழிவு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
(of) the punishment
வேதனையின்
l-hūni
ٱلْهُونِ
humiliating
இழிவான
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
for what they used (to) earn
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக

Transliteration:

Wa ammaa Samoodu fahadinaahum fastahabbul 'ama 'alal huda fa akhazathum saa'iqatul 'azaabil hooni bimaa kaanoo yaksiboon (QS. Fuṣṣilat:17)

English Sahih International:

And as for Thamud, We guided them, but they preferred blindness over guidance, so the thunderbolt of humiliating punishment seized them for what they used to earn. (QS. Fussilat, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம்முடைய தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, சமூது சமுதாயம் நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான வேதனையின் பேரழிவு பிடித்தது.